சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

3-வது செயற்கை நூலிழை மாநாடு 2025-ஐ மத்திய அமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUN 2025 6:44PM by PIB Chennai

நாட்டில் ஜவுளித்துறையில் செயற்கை நூலிழை துறை முக்கிய பங்கு வகிக்கும் என்றும், 2030-ம் ஆண்டிற்குள் அதன் ஏற்றுமதி மதிப்பு 100 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்துள்ளார்.  கோயம்புத்தூரில் இன்று (30 ஜூன் 2025) 3-வது செயற்கை நூலிழை மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார். செயற்கை நூலிழையின் உலகளாவிய தேவை குறித்து அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய ஜவுளித்துறையில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் மித்ரா பூங்கா, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டம் ஆகியவை இந்திய ஜவுளித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

முடிவுசெய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்தங்களும் இந்தியாவின் ஜவுளித் துறைக்கு மேலும் பயன்களை அளிக்கும் என்று திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பு  தலைவர் திரு ராகேஷ் மெஹ்ரா, புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய, நிலையான மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை இழைப்பொருட்களுக்கான மையமாக இந்தியா உருவாக முடியும் என்று கூறினார்.

இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பு முன்னணி பங்குதாரர்களுடன் இணைந்து இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது.

***

AD/IR/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2140880) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English