சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் பெரும் மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கியது

प्रविष्टि तिथि: 23 JUN 2025 6:41PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" இயக்கம் 2.0 என்ற பெயரில் ஒரு பெரும் மரக்கன்று நடும் இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தது.

இதை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பசுமையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பழமையான மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலைக் கொண்ட புதுச்சேரி பல்கலைக்கழக வளாகம் மற்ற பல்கலைக்கழகங்களை விட எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்பது குறித்து விளக்கினார்.

இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், மா, சீத்தாப்பழம், பலாப்பழம், கொய்யா, நெல்லி மற்றும் நீல பெர்ரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகையான பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.

***

AD/RR/DL


(रिलीज़ आईडी: 2139019) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English