ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொது மக்களின் பங்கேற்புடன் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்

Posted On: 21 JUN 2025 12:34PM by PIB Chennai

ஜல் சக்தி அமைச்சகம் தனது மண்டல அலுவலகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில்  சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது.  அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடனும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்வு, தேசிய தூய்மை கங்கை இயக்கம் சார்பில் புது தில்லியில் உள்ள ஜீரோ புஷ்தா பூங்காவில் உள்ள பிஎஸ்எஃப் கயாகிங் முகாமில், யமுனை நதிக்கரையில் நடைபெற்றது. நீர் பாதுகாப்பு மற்றும் நதி புத்துணர்ச்சி என்ற செய்தியுடன் நல்வாழ்வை மேம்படுத்துவதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. விசாகப்பட்டினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய அளவிலான கொண்டாட்டத்தை இவர்கள் நேரலையில் பார்த்தனர்.

யமுனை நிகழ்வில் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துணர்ச்சித் துறை செயலாளர் திருமதி தேபாஸ்ரீ முகர்ஜி, தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் இயக்குநர் திரு ராஜீவ் மிட்டல் மற்றும் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.

மக்களுக்கும் நதிகளுக்கும் இடையில் முழுமையான, நிலையான தொடர்புகளை வளர்ப்பதற்கும், மனித உடல், மன சமநிலை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு இரண்டையும் வளர்ப்பதற்கும் ஜல் சக்தி அமைச்சகம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

****

Release ID: 2138281

AD/PLM/RJ


(Release ID: 2138626) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi