விவசாயத்துறை அமைச்சகம்
நடப்பாண்டு கரீஃப் பருவ காலத்தில் பயிர் விதைப்பு 89.29 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUN 2025 1:26PM by PIB Chennai
நடப்பாண்டு கரீஃப் பருவத்தில் 13.06.2025 வரையிலான காலகட்டத்தில் பயிர் விதைப்பு பரப்பளவு குறித்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் மொத்த பயிர்கள் விதைப்பு பரப்பளவு 1.48 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 87.81 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் நடவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு அது 89.29 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. நெல் விதைப்பு கடந்த ஆண்டில் 4 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இந்த ஆண்டு அது 4.53 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள் பயிர் விதைப்பு கடந்த ஆண்டு 2.60 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 3.07 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துகள் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டு 1.50 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், இந்த ஆண்டு இது வரையில் 2.05 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
***
(Release ID: 2136891)
VL/PLM/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2136947)
வருகையாளர் எண்ணிக்கை : 15