சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நடமாடும் கடவுச் சீட்டு வாகன சேவை சென்னையில் தொடக்கம்
Posted On:
16 JUN 2025 9:27PM by PIB Chennai
கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) சேவா திட்டத்தின் இணைச் செயலாளரும், வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை பாஸ்போர்ட் அலுவலருமான டாக்டர் கே.ஜே. ஸ்ரீனிவாசா, இன்று (16.06.2025) சென்னையில் உள்ள புகழ்பெற்ற எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடமாடும் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) வாகன சேவையைத் தொடங்கி வைத்தார்.
தற்போதுள்ள பாஸ்போர்ட் சேவா மையங்கள் (PSKs) மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா மையங்கள் (POPSKs) தவிர, கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதே இந்த வேன் சேவையின் நோக்கமாகும். இந்த வேன் முதலில் சென்னை தாம்பரத்தில் நிறுத்தப்படும், பின்னர் பாஸ்போர்ட் பெறுவதற்கான கால வரம்புகள் மிக அதிகமாக உள்ள அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும்.
JECN.jpeg)
இந்த தொடக்க நிகழ்ச்சியின் போது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். விஜயகுமார் உடனிருந்தார். நிகழ்ச்சியில் TCS அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
***
AD/DL
(Release ID: 2136826)