சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலான முதுநிலை பட்டம் மற்றும் பட்டய வகுப்புகளுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் தேதி 20.06.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
13 JUN 2025 6:29PM by PIB Chennai
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலான முதுநிலை பட்டம் மற்றும் பட்டய வகுப்புகளில் சேர இணையவழி விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 20.06.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்களின் பதிவை பூர்த்தி செய்ய முடியாத விண்ணப்பதாரர்களுக்கும் புதிதாக விண்ணப்பம் செய்வோருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்வி ஆண்டு 2025 -26-க்கான முதுநிலை பட்டம் மற்றும் முதுநிலை பட்டய வகுப்புகளுக்கு https://www.pondiuni.edu.in/admissions-2025-26/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பாடங்களுக்கு தேவையான வினாத்தாள்கள், தகவல் கையேடு ஆகியவை பல்கலைக்கழக இணைய தளத்தில் கிடைக்கும்.
***
AD/SMB/AG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2136231)
வருகையாளர் எண்ணிக்கை : 9