சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு, 2025

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUN 2025 7:37PM by PIB Chennai

‘ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு, 2025’க்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் 09.06.2025 அன்று வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/மத்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிர்வாக அமைப்புகள்/சட்டரீதியான அமைப்புகள்/தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் குரூப் “பி” மற்றும் குரூப் “சி” பதவிகளை நிரப்புவதற்கான திறந்தநிலை போட்டித் தேர்வை ஆணையம் நடத்தும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுகிறார்கள்.

பதவி விவரங்கள், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள், பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வலைத்தளமான ssc.gov.in அல்லது ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் ‘mySSC’ என்ற செயலி மூலம் இணையவழியில் விண்ணப்பங்களை  சமர்ப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 04.07.2025 (இரவு 11:00 மணி) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 05.07.2025 (இரவு 11:00 மணி) ஆகும்.

ஆந்திராவில் 13 மையங்கள், புதுச்சேரியில் 01 மையம், தமிழ்நாட்டில் 8 மையங்கள், தெலங்கானாவில் 3 மையங்கள் உட்பட, தென் பிராந்தியத்தில் 25 மையங்கள்/நகரங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

***

AD/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2135832) வருகையாளர் எண்ணிக்கை : 94
இந்த வெளியீட்டை படிக்க: English