சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரகாஷ் பாபு, சீமைக் கருவேலம் (Prosopis) தொடர்பான புதிய நூலை வெளியிட்டார்

Posted On: 24 MAY 2025 4:59PM by PIB Chennai

உள்நாட்டில் சீமைக் கருவேலம் என்று அழைக்கப்படும் ப்ரோசோபிஸ், உலகின் மிக ஆதிக்கம் செலுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் களைகளாக உருவெடுத்துள்ளன. ப்ரோசோபிஸ் அச்சுறுத்தலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது. ஏனெனில் ப்ரோசோபிஸ் பல மாநிலங்களில் பரவி, கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதுச்சேரி-தமிழ்நாடு பகுதியிலும், ப்ரோசோபிஸ் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் வளர்ந்து வருகிறது. பலதரப்பட்ட சிக்கல்களை இது உருவாக்குகிறது. 

ப்ரோசோபிஸ் மற்ற வகை தாவரங்களை அதன் அருகில் இருந்து விரட்டி, இடத்தை ஏகபோகமாக்குகிறது. புரோசோபிஸின் எதிர்மறையான தாக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், 2022-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலையிடுமாறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புதுவை  பல்கலைக்கழகத்தில் முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ. அப்பாஸி மற்றும் அவரது குழுவினர் பொருளாதார ரீதியாக சாத்தியமான வழிகள் மற்றும் புரோசோபிஸைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழு அதன் சொந்த ஆராயச்சியின் கண்டுபிடிப்புகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக Prosopis Juliflora: Attributes, Impact, Utilization என்ற பெயரில் வெளிட்டுள்ளது.  புதுவை  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரகாஷ் பாபு நூலை வெளியிட்டார். இந்த நூல் சீமை கருவேல மரங்களை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் உலகளாவிய முயற்சிகளைத் தூண்டும் என்று அவர் கூறினார்.

****

PLM/SG


(Release ID: 2130943)
Read this release in: English