சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னையில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழில் துறை பாதுகாப்பு குறித்து 2 நாள் பயிற்சி முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAY 2025 12:23PM by PIB Chennai

 

சென்னையில் உள்ள மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழில் துறை பாதுகாப்பு குறித்து 2 நாள் பயிற்சி முகாம் இன்று (22.05.2025) தொடங்கியது. இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சஞ்சீவ் குப்தா தொடங்கி வைத்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழக வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில் அதிகமாக விபத்து ஆபத்து உள்ள அலகுகள் என்று அடையாளம் காணப்பட்ட 66 ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயன தொழில்களை சேர்ந்த 114 பேர் பங்கேற்றுள்ளனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும் ஆபத்து விளைவிக்கும் பொருட்களை கையாளும் அலகுகளில் இயல்பாகவே பிரச்சனைகளும் உருவாகின்றன. இவற்றில் வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்ய பயிற்சி பெற்ற, திறன் மிக்க தொழிலாளர்கள் அவசியமாகின்றனர். இத்தகைய பயிற்சி மனித உயிர்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தேவைப்படுகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அதிக விபத்து அபாயம் உள்ள தொழில் துறைகள் பயனடையும் வகையில், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சார்பில் இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

***

AD/SM/SMB/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2130524) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English