சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கருத்தரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2025 5:39PM by PIB Chennai

சிஎஸ்ஐஆர் -கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் இன்று சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் "முக்கிய உள்கட்டமைப்பின் கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் முன்கணிப்பு பராமரிப்பு" குறித்த அதன் வைர விழா சர்வதேச கருத்தரங்கை நடத்துகிறது. இம்மாநாடு 2025 மே 21 தொடங்கி 23 வரை நடைபெறும்.

     

இம்மாநாட்டில்  ரயில்வே அமைச்சகத்தின் முதன்மை செயல் இயக்குநர் (பாலங்கள்) திரு ரவீந்திர குமார் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது இந்திய ரயில்வே - பாலங்கள் உள்கட்டமைப்பு: ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், இந்திய ரயில்வேயின் குறிப்பிடத்தக்க வரலாற்றை எடுத்துரைத்து, அதன் தொடக்க உள்கட்டமைப்பு 1853 -ம் ஆண்டு நிறுவப்பட்டதாக குறிப்பிட்டார். தற்போது, இந்த கட்டமைப்பு சுமார் 1,63,810 பாலங்களைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பெரும்பாலான மீட்டர் கேஜ் பாலங்களின் செலவு குறைந்த பராமரிப்பை செயல்படுத்துவதில் ஐஐடி-கள் மற்றும் சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி போன்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். பாலங்களுக்காக இந்திய ரயில்வே கடுமையான ஆய்வு முறைகளைப் பயன்படுத்துகிறது என்றும், பாலங்கள் கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கான ஏராளமான திட்டங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒத்துழைக்கிறது என்றும் திரு கோயல்  கூறினார். பாலங்கள் பராமரிப்பில் உள்ள பெரும் சவால்கள் குறித்து குறிப்பிட்ட அவர், இந்திய ரயில்வே குறைந்த செலவில் சிறந்த தீர்வுகளை காண முயற்சிப்பதாக கூறினார். பாலங்கள் பொறியியலில் சிறப்பு நிபுணத்துவத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி இயக்குநரும், சிஎம்சி-ன் ஒருங்கிணைப்பு இயக்குநருமான டாக்டர் என். அனந்தவல்லி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டங்கள்) மற்றும் வாரிய உறுப்பினர் திரு டி. அர்ச்சுனன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

     

***

AD/IR/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2130326) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: English