திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், வளர்ச்சியை செயல்படுத்துதல்: வடகிழக்கு தொழிற்பயிற்சி முன்னோடித் திட்டத்தை மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்
Posted On:
20 MAY 2025 4:05PM by PIB Chennai
உள்ளடக்கிய வளர்ச்சி, பிராந்திய அதிகாரமளிப்புக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், வடகிழக்கு பிராந்தியத்தில் தொழிற் பயிற்சியை ஊக்குவிப்பதற்கான ஒரு உத்தி சார்ந்த முன்னோடித் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தை ஐஸாலில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் அஷ்ட லட்சுமி மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த வடகிழக்கு என்ற தொலைநோக்குப் பார்வையில் திட்டமிடப்பட்ட இந்த முயற்சி, பிராந்தியம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு கட்டமைக்கப்பட்ட, ஊதியம் மற்றும் உயர்தர தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு முக்கிய நிதி உதவி நடவடிக்கையாக, இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த 26,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னோடி முயற்சியின் கீழ், தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் மூலம் வழங்கப்படும் வழக்கமான உதவித்தொகைக்கு கூடுதலாக ஒரு ஆண்டிற்கு 1,500 ரூபாய் பெறுவார்கள். வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு இந்த ஆதரவு பொருந்தும். இது வடகிழக்குக்கு உள்ளேயும் வெளியேயும் பயிற்சி பெறுவதற்கு இயக்கம் ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்கிறது. முன்னோடி முயற்சிக்கு மொத்தம் 43.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் தொடர்பு பணி, திறன் மேம்பாடு மற்றும் திட்ட செயல்படுத்தலுக்கான 4 கோடி ரூபாயும் அடங்கும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, தேசிய தொழிற் பயிற்சி பழகுநர் முன்னோடி திட்டத்தின் கீழ், இது நமது இளைஞர்களுக்கு உண்மையான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. அவர்கள் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பை பெறவும், சமகால தொழில்துறையின் இயக்கவியலைப் புரிந்துகொள்ளவும், அவர்களின் திறன்களை தற்கால உலக தேவையுடன் சீரமைக்கவும் அனுமதிக்கிறது என்று குறிப்பிட்டார். தொழில்துறையைப் பொறுத்தவரை, திறமைகளை முன்கூட்டியே ஈடுபடுத்தவும் மதிப்பீடு செய்யவும் இது ஒரு வெளிப்படையான வழிமுறையை வழங்குகிறது என்று அவர் கூறினார்.
மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா பேசியபோது, மத்திய அரசுடனான இந்த ஒத்துழைப்பு மிசோரம் மற்றும் பரந்த வடகிழக்கு இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று கூறினார். நிதி உதவி, தரமான பயிற்சி மற்றும் வலுவான தொழில்துறை இணைப்புகளுடன், இந்த முயற்சி நமது இளம் குடிமக்கள் வடகிழக்கிலோ அல்லது நாடு முழுவதிலோ நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதார நிலப்பரப்பில் தங்கள் சரியான இடத்தைக் கண்டறிய அதிகாரம் அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129889
***
SM/IR/RR/KR
(Release ID: 2129912)