வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டுடன் வர்த்தக நிவாரணங்களுக்கார தலைமை இயக்குநரகம் தனது 8-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

प्रविष्टि तिथि: 17 MAY 2025 2:24PM by PIB Chennai

வர்த்தக நிவாரணங்களுக்கார  தலைமை இயக்குநரகத்தின்  8-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் இறக்குமதி நடைமுறைகளில் ஏற்படும் உடனடி ஏற்றத்தாழ்வுகளிலிருந்து நாட்டின் தொழில்துறையைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை வழங்கிவரும் இந்த இயக்குநரகத்தின் ஏழு ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வர்த்தக நடைமுறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சூழல் அமைப்பின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளை

வர்த்தக நிவாரணங்களுக்கான  தலைமை இயக்குநரகத்தின் தலைமை இயக்குநர் பாராட்டினார்.

1995 - ம் ஆண்டு முதல், இந்தியா 1,200 - க்கும் மேற்பட்ட வர்த்தக தீர்வு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட தொழில்துறைக்குத் சரியான நேரத்தில் நிவாரணம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, விசாரணைகள் விரைவாக நடத்தப்பட்டு, ஒரு ஆண்டு காலத்திற்குள் விசாரணை நிறைவு பெறுவதற்கு இந்நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அண்மையில், சூரிய எரிசக்தி மற்றும் மேம்படுத்தப்பட்ட பொருட்கள், சூரிய மின்கலங்கள், செப்பு கம்பிகள் போன்ற உள்நாட்டுத் தொழில் துறைகளை நியாயமற்ற விலைகள், இறக்குமதிகள் மற்றும் மானிய விலையில் கிடைக்கும் பொருட்களிலிருந்து இந்த இயக்குநரகம் பாதுகாத்துள்ளன.

எதிர்காலத்தில், வர்த்தகத் தீர்வு தொடர்பான விசாரணைகளில் ஆவணங்களை மின்னணு முறையில் சமர்ப்பிப்பதை செயல்படுத்த மத்திய அரசு ஒரு டிஜிட்டல் தளத்தை உருவாக்கி வருகிறது. இந்த இணையதம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அனைத்து பங்குதாரர்களுக்கும் மேம்பட்ட வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்திறன் மற்றும் அணுகலை எளிதாக்குகிறது.

பாதுகாப்புக் கடமைகள் மற்றும் அளவு கட்டுப்பாடுகள் மூலம், பாமாயில் மற்றும் உலோகவியல் கோக் போன்ற தயாரிப்புகளுக்கான இறக்குமதி சார்ந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு இந்த நிறுவனம் உரிய தீர்வு காண வகை செய்கிறது. இது சந்தை நிலைகளை உறுதிப்படுத்தவும் தொழில்துறையில் போட்டித்தன்மையைப் பாதுகாக்கவும் உதவுகிறது. உலகளவில் நிலவி வரும் நிச்சயமற்ற வர்த்தகச் சூழல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய உற்பத்தித் துறைகளுக்கு முன்னெச்சரிக்கை அணுகுமுறை மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129294

 

***

TS/SV/DL


(रिलीज़ आईडी: 2129323) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी