சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

"புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி" இன்று சென்னையில் நடைபெற்றது

Posted On: 16 MAY 2025 5:39PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில் இன்று 16.05.25 “மானக் சம்வாத் என்ற புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியைநடத்தியது.

 

இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும்  அதைத் தொடர்ந்து அறிமுகத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்தத் தொகுப்பில் உரிமைதாரர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றன. அவை உரிமம் பெற்றவர்கள், தரம் மற்றும் பாதுகாப்பு நிலைகளில் நாட்டின் முதன்மையான நிறுவனத்துடன் இணைவதற்கு உதவியது. திட்டத்தின் போது புதிய உரிமம் பெற்றவர்களுக்கு அசல் உரிம ஆவணங்களும் வழங்கப்பட்டன. உரிமம் பெற்றவர்கள் பிஐஎஸ் அதிகாரிகளுடன் தகவல் பரிமாற்ற  வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி வழங்கியது.

சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர்  திருமதி ஜி. பவானி, மற்றும் இயக்குர் திரு முனிநாராயணா ஆகியோர் உணர்திறன் கூட்டத்தை இணைந்து நடத்தினர்.

 

உரிமம் பெற்றவர்கள் தரப்பில் இருந்து உயர் நிர்வாக அதிகாரி மற்றும் தரக் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 30 உரிமதாரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

SM/SMB/SG


(Release ID: 2129124)
Read this release in: English