சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுவைப் பல்கலைக்கழக தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு நாள்விழா
Posted On:
14 MAY 2025 4:25PM by PIB Chennai
புதுவைப் பல்கலைக்கழகத்தின் தினக்காப்பகம் மற்றும் தொடக்கப்பள்ளி நடத்தும் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு நாள்விழா, புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.பிரகாஷ் பாபு தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அவரின் துணைவியார் டாக்டர் அன்விதா முதிராஜ் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், பேராசிரியர்
கிளெமன்ட் சகாயராஜ் ஆலூர்து, இயக்குநர், (C & CR) மற்றும் பேராசிரியர் ரஜ்னீஷ் பூடானி, பதிவாளர், (பொறுப்பு), ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தினக்காப்பகம் மற்றும் தொடக்கப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரேகா ராணி வரவேற்புரையாற்றி ஆண்டு அறிக்கையை வழங்கினார்.
சீனியர் கிண்டர்கார்டன் வகுப்பை முடித்த மாணவர்களுக்கு, அவர்களது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பட்டமளிப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டன. தினக்காப்பகம் மற்றும் தொடக்கப்பள்ளியின் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களால் நடத்தப்பட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், அனைவரையும் கவர்ந்தன
***
SM/RR
(Release ID: 2128647)