இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பிளாக்ஸ்டோன் குழுமம் மற்றும்/அல்லது சத்வா குழுமத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களை நாலெட்ஜ் ரியாலிட்டி டிரஸ்ட் கையகப்படுத்துவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 13 MAY 2025 7:32PM by PIB Chennai

இந்திய போட்டி ஆணையம், பிளாக்ஸ்டோன் குழுமம் மற்றும்/அல்லது சத்வா குழுமத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களை நாலெட்ஜ் ரியாலிட்டி டிரஸ்ட் கையகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முன்மொழியப்பட்ட சேர்க்கை, நாலெட்ஜ் ரியாலிட்டி டிரஸ்ட்டின் நேரடி மற்றும் மறைமுக கையகப்படுத்துதலை உள்ளடக்கியது, அதன் மேலாளர், நாலெட்ஜ் ரியாலிட்டி ஆபிஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (முன்னர் டிரினிட்டி ஆபிஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) (கையகப்படுத்துபவர் ஆர்இஐடி) மூலம் செயல்படும் சில நிறுவனங்களை கையகப்படுத்துகிறது‌. அவற்றில் சில பிளாக்ஸ்டோன் குழுமத்தைச் சேர்ந்தவை, சில சத்வா குழுமத்தைச் சேர்ந்தவை மற்றும் மீதமுள்ளவை பிளாக்ஸ்டோன் மற்றும் சத்வா குழுமத்தால் (இலக்கு நிறுவனங்கள்) கூட்டாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தகைய கையகப்படுத்துதலுக்குப் பதிலாக, இலக்கு நிறுவனங்களின் தற்போதைய பங்குதாரர்களுக்கு கையகப்படுத்துபவர் (ஆர்இஐடி) இன் அலகுகள் வழங்கப்படும்.

ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128473 


 

***

RB/DL


(रिलीज़ आईडी: 2128515) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी