சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி முதலமைச்சருடன் புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு

Posted On: 13 MAY 2025 6:13PM by PIB Chennai

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் அனுமதியின் கீழ், மாஹேவில் புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி நிரந்தர வளாகம் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கீடு செய்யவும், யானத்தில் புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியை நிறுவவும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. என். ரங்கசாமியை, புதுவை  பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ப. பிரகாஷ் பாபு இன்று நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பல்கலைக்கழக ஆய்வு இயக்குநர் பேராசிரியர் க. தரணிக்கரசு உடனிருந்தார்.

  

இந்த முயற்சி, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில், அந்த மண்டலங்களில் திறன் அடிப்படையிலான உயர் கல்வி மற்றும் தொழில் பண்பாட்டு பயிற்சிகளை மேம்படுத்துவதுடன் வாய்ப்புகளை அதிகரிக்க உதவும்.

  

***

GK/RJ/RR


(Release ID: 2128446)
Read this release in: English