சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தர நிர்ணய அமைவனத்தின், மேம்பட்ட வள பணியாளர்களுக்கான "தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்" கீழ் அறிவியல் பாடத் திட்டங்களை பரிவர்த்தனை செய்வது குறித்த இரண்டு நாள் பயிற்சித் திட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது
Posted On:
13 MAY 2025 3:39PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ முத்திரை), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

பிஐஎஸ் தெற்கு பிராந்திய அலுவலகம், 2025 மே 13,14 ஆகிய நாட்களில் சென்னையில், மேம்பட்ட வள பணியாளர்களுக்கான "தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்" கீழ் அறிவியல் பாடத் திட்டங்களை பரிவர்த்தனை செய்வது குறித்த இரண்டு நாள் பயிற்சித் திட்டத்தை இன்று தொடங்கியது.
பிஐஎஸ் ஏற்கனவே 'தரநிலைகள் வழியாக அறிவியல் கற்றல்' என்ற ஒரு தனித்துவமான முயற்சியை தொடங்கியுள்ளது. இது தரநிலைகள் வழியாக அறிவியல் கற்றல் என்ற ஒரு தனித்துவமான முயற்சியாகும். 'தரநிலைகள் வழியாக அறிவியல் கற்றல்' என்ற இந்த முயற்சி, இந்திய தரநிலைகளில் கூறப்பட்டுள்ளபடி, பல்வேறு பொருட்களின் உற்பத்தி, செயல்பாடு மற்றும் தர பண்புகளை சோதிப்பதில் மாணவர்கள் தங்கள் பயன்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அறிவியல் கருத்துக்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்களை நோக்கமாகக் கொண்ட பாடத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. பாடத் திட்டங்களுக்கான பாடங்கள் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளுடன் தொடர்புடைய மற்றும் கல்விக்கும் தொழில்துறை பயன்பாடுகளுக்கான பொருத்தத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் தரம் மற்றும் தரநிலைகளின் முக்கியத்துவத்தை உணர்வதற்கும், எதிர்காலத்தில் அன்றாட சூழ்நிலைகளை துணிச்சலுடன் எதிர்கொள்ள அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கும் பாடத் திட்டங்கள் ஒரு வழிமுறையாகவும் செயல்படும்.
தரநிலை மேம்பாட்டிற்காக பிஐஎஸ்-ன் பல்வேறு கிளை அலுவலகங்களின் கீழ், ஆழ்ந்த அறிவு, வலுவான தகவல் தொடர்பு திறன் மற்றும் பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டில் அனுபவம் கொண்ட வள நபர்கள் அடையாளம் காணப்பட்டனர், மேலும் பிஐஎஸ் அதிகாரிகள் மற்றும் வளப் பணியாளர்கள் மாணவர்களுக்கு பாடத் திட்டங்களை அறிவியல் கற்றல் அனுபவத்திற்காக வழங்குவார்கள்.
பிஐஎஸ் தெற்கு பிராந்தியத்தின் 8 கிளை அலுவலகங்களைச் சேர்ந்த சுமார் 100 வள நபர்கள் கொண்ட இந்த இரண்டு நாள் பயிற்சித் திட்டங்களில், பால், சமையல் சிலிண்டர் அடுப்பு, தலைக்கவசம், கால்பந்து, பிரஷர் குக்கர், டயர், ஜியோ டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பால் பவுடர் பற்றிய பாடத் திட்டங்கள் குறித்து இந்திய தர நிர்ணய அமைவன கிளை அலுவலக அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த எட்டு பாடத் திட்டங்களும் வள நபர்களுக்கான பல்வேறு செயல்பாடுகள் உட்பட விரிவாக விவாதிக்கப்படும்.
சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி-எஃப் மற்றும் தலைவரான திருமதி.ஜி.பவானி பங்கேற்பாளர்களை வரவேற்று நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். பயன்பாட்டுக் கருத்துகள் மற்றும் வழிமுறைகளை விஞ்ஞானி-டி அருண் புச்சகல்யா விளக்கினார்.
***
IR/RR
(Release ID: 2128388)