சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுவைப் பல்கலைக்கழகம் சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து தொலைதூரக் கல்வி தொடர்பான தேசிய கருத்தரங்கை நடத்தியது
Posted On:
02 MAY 2025 6:06PM by PIB Chennai
"கல்வி நிறுவனங்களின் இணைவு ஆக்கம்: தொலைதூரக் கல்வி முறையில் முன்னுதாரணமான மாற்றங்கள்" என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய கருத்தரங்கு சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து தொலைதூரக் கல்வி இயக்ககம், புதுவைப் பல்கலைக்கழகம் நடத்தியது. சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முதல் நாள் கருத்தரங்கில், இக்கருத்தரங்கின் முக்கிய தலைப்புகள் அறிவிக்கப்பட்டது.

கருத்தரங்கின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்கள் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் கருத்தரங்கு, புதுவைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கத்தின் இயக்குனர் முனைவர் அரவிந்த் குப்தாவின் வரவேற்புரையுடன் துவங்கியது. சென்னை லயோலா கல்லூரியின் அருட்தந்தை வி சகாயராஜ் வாழ்த்துரையாற்றினார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் திறந்த நிலை மற்றும் தொலைதூரக் கல்வி மையத்தின் இயக்குனர் முனைவர் ஹர்ஷ் கந்தார் கருத்தரங்கின் தலைமை உரை ஆற்றினார். கருத்தரங்கின் தலைமை விருந்தினர் பேராசிரியர் கே தரணி கரசு (இயக்குனர், (SEI&RR).) சிறப்புரையாற்றி விழாவைச் சிறப்பித்தார். பல்கலைக்கழக கலாச்சார மையத்தில். பல்வேறு மாநில கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான கலாச்சார நிகழ்ச்சி மாணவர்களால் நடத்தப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வு அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களால் 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இம்மூன்று நாள் கருத்தரங்கு பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களை ஊக்குவித்ததோடு தொலைதூரக் கல்வியில் புதிய இணைவு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. இக்கருத்தரங்கு ஆய்வாளர்கள் கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் தொலைதூரக் கல்வியில் உள்ள தடைகளை அறிந்து கொள்ளவும் தொலைநிலை கற்றலை மேம்படுத்தும் வழிகளை ஊக்குவிக்கவும் நல்லதொரு தளமாக அமைந்தது.

துணைவேந்தர் பேராசிரியர் பி பிரகாஷ் பாபு அவர்களின் தொலைநோக்கும், தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் அரவிந்த் குப்தா தலைமையிலான தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் குழுவின் நுணுக்கமான செயல்பாடும் பங்கேற்பாளர்களின் பங்களிப்புமே இக்கருத்தரங்கின் வெற்றிக்கான காரணங்களாக அமைந்தன.
இக்கருத்தரங்கின் தலைமை அறிக்கையாளர் மற்றும் சட்ட மேற்படிப்பு துறையின் தலைவருமான முனைவர் குருமீந்தர் கவுர் கருத்தரங்க அறிக்கையை சமர்ப்பித்தார். கருத்தரங்கின் நிறைவு விழாவில் தலைமை விருந்தினர் பேராசிரியர் கிளமெண்ட் சகாயராஜா லூர்து (இயக்குனர், CCR) மற்றும் சிறப்பு விருந்தினர் முனைவர் டி ஸ்ரீனிவாசன் (இயக்குனர், CDOE, அண்ணாமலை பல்கலைக்கழகம்) உரையாற்றினர். பல்கலைக்கழகத்தின் இணைப்பதிவாளர் முனைவர் ஏ சரவணன் நன்றி உரையாற்றினார்.
****
AD/SG
(Release ID: 2126238)
Visitor Counter : 33