அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான புதிய அணுகுமுறை

Posted On: 28 APR 2025 5:09PM by PIB Chennai

வினையூக்கிகளின் மேற்பரப்பில் புரோட்டான் குறித்த புதிய நுண்ணறிவுகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு பயனுள்ள மின்வினையூக்கிகளை உருவாக்க உதவிடும்.

உள்ளமைக்கப்பட்ட மின் புலத்தின்  விளைவுடன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு ஏராளமான ஹெட்ரோரோஸ்ட்ரக்சர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், உலோக-ஆக்சைடு-குறைக்கடத்தி  அடிப்படையிலான பி-என் இடைமுகம் (ஹெட்ரோஜங்ஷன் )சமச்சீரற்ற மின் சூழல் காரணமாக வலுவான பிஐஇஎஃப்-ஐ கொண்டுள்ளது.

ஹைட்ரஜன் உற்பத்தியை மேம்படுத்த பல்வேறு மின்னணு சூழல்களை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கவனம் செலுத்துகின்றன.

மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள், தாமிர ஹைட்ராக்சைடு, காப்பர் டங்ஸ்டன் ஆக்சைடு போன்ற நானோ-துகள்களை மேம்படுத்தி ஹெட்ரோ-கட்டமைப்பை உருவாக்கி அதன் இயற்பியல் மற்றும் மின்வேதியியல் பண்புகளை ஆய்வு செய்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2124882

*****

 

TS/SV/KPG/DL


(Release ID: 2124957) Visitor Counter : 16
Read this release in: English , Urdu , Hindi