பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாகர் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஐஎன்எஸ் சுனைனா கப்பல் மொசாம்பிக் சென்றடைந்தது

Posted On: 18 APR 2025 6:05PM by PIB Chennai

ஐஎன்எஸ் சுனைனா கப்பல், இந்தியப் பெருங்கடல் கப்பல் பயண நல்லிணக்க முயற்சியான ஐஓஎஸ் சாகர்-ன் ஒரு பகுதியாக  2025 ஏப்ரல் 17 அன்று மொசாம்பிக்கின் நாகாலா துறைமுகத்தை  சென்றடைந்துள்ளது. இந்தக் கப்பல் முன்னதாக தான்சானியாவின் தார்-எஸ்-சலாமில் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்க கடல்சார் பயிற்சியில் பங்கேற்று இருந்தது.

ஐஓஎஸ் சாகர் என்பது மத்திய அரசின் பிராந்திய கடல் சார் ஒத்துழைப்புக்கான முன்முயற்சியாகும். இது பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கிறது.

இந்தக் கப்பலின் பயணத்தை கார்வாரில் இருந்து ஏப்ரல் 5 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொமொரோஸ், கென்யா, மொசாம்பிக், சீஷெல்ஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது நட்பு நாடுகளைச் சேர்ந்த 44 கடற்படை வீரர்களுடன் அது இந்தியாவிலிருந்து புறப்பட்டது.

தற்போது மொசாம்பிக் கடற்படையுடன் இணைந்து திறன் வளர்ப்பு, சமூக ஈடுபாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட துறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடும்இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டாண்மையை வலுப்படுத்துதல், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துதல், சாகர் முன்முயற்சியின் தொலைநோக்குக்கு ஏற்ப கூட்டு பிராந்திய பாதுகாப்பை வளர்த்தல் ஆகியவற்றில் இந்தியாவின் நீடித்த உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது.

***

(Release ID: 2122722)

SV/PLM/RJ


(Release ID: 2122755) Visitor Counter : 28
Read this release in: English , Urdu , Hindi