அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விண்வெளி கருந்துளைகள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்தியத் தொலைநோக்கி
प्रविष्टि तिथि:
17 APR 2025 4:36PM by PIB Chennai
இந்தியாவின் மிகப்பெரிய ஆப்டிகல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சுமார் 4.3 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்மீன் மண்டலத்தில் உள்ள இடைநிலைக் கருந்துளையை கண்டுபிடித்த விண்வெளி ஆய்வாளர்கள், வாயு மேகங்கள் கருந்துளையை 125 ஒளி நிமிடங்கள் (சுமார் 2.25 பில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் வினாடிக்கு 545 கி.மீ வேகத்தில் சுற்றி வருவதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த கருந்துளைகள் சுற்றுப்புறங்களுடன் எவ்வாறு வளர்ந்து தொடர்பு கொள்கின்றன என்பது பற்றிய நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு செம்மைப்படுத்துகிறது.
3.6 மீ தேவஸ்தல் ஆப்டிகல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு, என்.ஜி.சி 4395 எனப்படும் மங்கலான விண்மீன் மண்டலத்தில் கருந்துளைகளின் பண்புகளை வெற்றிகரமாக கண்டறிந்து அளவிட்டுள்ளது.
கருந்துளையைச் சுற்றியுள்ள பகுதியின் அளவை ஒரு அதிநவீன தொலைநோக்கி மூலம் கணிப்பது மிகவும் கடினம் என்பதால், குழு இரண்டு தொலைநோக்கிகளையும் பயன்படுத்தி இரண்டு இரவுகள் தொடர்ந்து கண்காணித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122433
***
TS/GK/SG/KR
(रिलीज़ आईडी: 2122486)
आगंतुक पटल : 47