சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
2024-25-ம் நிதியாண்டில் சென்னை அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 74,332 பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்
प्रविष्टि तिथि:
17 APR 2025 4:39PM by PIB Chennai
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2015-ம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 31.03.2025 வரை சென்னை மண்டலத்தில் 9234 கோடி வைப்புத் தொகையுடன் 10.44 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அஞ்சல் மண்டலத்தில் சென்னை மாநகர் கோட்டங்கள், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. 2024-25-ம் ஆண்டில் மட்டும் இந்த மண்டலத்தில் இத்திட்டத்தில் பெறப்பட்ட வைப்புத் தொகை 1798 கோடி ரூபாயாகும். அதற்கு முந்தைய ஆண்டில் 1564 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக மக்களால் செலுத்தப்பட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டின் வைப்புத்தொகை 14.96 சதவீதம் அதிகரித்துள்ளது.
செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்கிற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத அதிக வட்டியும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி-ன் கீழ் வைப்புத்தொகைகளுக்கு வருமான வரி விலக்கும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். 18 வயதிலோ அல்லது உயர் கல்வி நோக்கங்களுக்காக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகோ 50 சதவீத தொகையை திரும்பப் பெறலாம். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடையும்.
இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு, www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
***
AD/PLM/RR/KR
(रिलीज़ आईडी: 2122437)
आगंतुक पटल : 67
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English