சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய கல்வி அமைச்சர் - புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
17 APR 2025 4:33PM by PIB Chennai

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு இன்று (17.04.2025) புதுதில்லியில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, பல்கலைக்கழகம், அதனுடன் இணைந்துள்ள கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட கல்விப் பணிகள் தொடர்பான முன்னேற்றங்கள், நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, மத்திய கல்வி அமைச்சருடன் பகிர்ந்துகொண்டார். பல்கலைக்கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள், வழிகாட்டுதல்கள், மத்திய அரசின் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், மத்திய கல்வி அமைச்சரை, புதுச்சேரிக் பல்கலைக்கழகத்துக்கு வருகை தருமாறு பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு அழைப்பு விடுத்தார்.
குடியரசுத்தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மேன்மையருமான திருமதி திரௌபதி முர்மு, கடந்த மாதம் பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபுவை, பல்கலைக்கழகச் சட்டம், 1985-ன் பிரிவு 1-ஏ-இன் கீழ் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார்.
அதன்படி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபு கடந்த 2025 மார்ச் 17-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
***
AD/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2122432)
வருகையாளர் எண்ணிக்கை : 14