புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் எண்ணிக்கை குறித்தக் கணக்கெடுப்பு – 2024 -ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்கள்

Posted On: 09 APR 2025 4:00PM by PIB Chennai

நாட்டில் தொழிலாளர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு அவ்வப்போது நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இதன்படி, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், நகர்ப்புறங்களில் தொழிலாளர்களின் பங்கேற்பு எண்ணிக்கை விகிதம் ஆண்களைப்  2023-ம் ஆண்டில் 74.3 சதவீதத்தில் இருந்து 2024-ம் ஆண்டில் 75.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.  

பெண்களைப் பொறுத்து

2023-ம் ஆண்டில் 25.5 சதவீதத்தில் இருந்து 2024-ம் ஆண்டில் 25.8 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது.

அனைத்து வகைகளைச் சார்ந்த தொழிலாளர்களைப் பொறுத்து குறிப்பாக நகர்ப்புறங்களில் ஒட்டுமொத்த தொழிலாளர்-உழைக்கும் வயதில் உள்ள மக்கள் விகிதம் 47.0% இல் இருந்து 47.6% என  சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.  இந்த விகிதம் அகில இந்திய அளவில்,   எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது.(53.4%இல் இருந்து 53.5%)

வேலைவாய்ப்பின்மை விகிதம் கிராமப்புறங்களில் சற்று குறைந்துள்ளது. கிராமப்புறங்களில், ஒட்டுமொத்த வேலைவாய்பின்மை விகிதம் 4.3% முதல் 4.2% மாகக்  குறைந்துள்ளது.

வீட்டுவசதிக் கட்டுமான நிறுவனங்களில் ஊதியம் பெறாத உதவியாளர்களின்  எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு, கிராமப்புற பெண்களிடையே வேலைவாய்பின்மைக்கு வழி வகுத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120359

------

TS/SV/KPG/RR/DL


(Release ID: 2120531) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi