விண்வெளித்துறை
நாடாளுமன்றக் கேள்வி: இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையம் குறித்த அண்மைத் தகவல்கள்
Posted On:
03 APR 2025 5:11PM by PIB Chennai
பரீட்சார்த்த செயற்கை கோள் தொடர்பு புவி நிலையம் 1966-ம் ஆண்டு அகமதாபாதில் டாக்டர் விக்ரம் ஏ சாராபாயால் நிறுவப்பட்டது. 1972-ல் விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பல்வேறு அலகுகளை இணைத்து விண்வெளி பயன்பாட்டு மையம் உருவாக்கப்பட்டது. 1975-76-ல் இந்த மையம் மற்றும் இஸ்ரோ மூலம் செயற்கைக் கோள் கட்டளை தொலைக்காட்சி பரிசோதனை என்ற தனித்துவமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊரக இந்தியாவின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட ஆற்றல் மிக்க செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தை இந்தப் பரிசோதனை வெளிப்படுத்தியது.
விண்வெளி பயன்பாட்டு மையம் என்பது இஸ்ரோவின் தனித்துவமான பன்னோக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக விளங்குகிறது. இந்த மையம் தற்போது அதன் வலுவான விண்வெளி ஆய்வு மற்றும் மேம்பாட்டு திறன்களால் உயர்ந்து நிற்கிறது. இஸ்ரோவின் பல்வேறு தேசிய, உத்திசார்ந்த, சமூகம் சார்ந்த, தொழில்நுட்ப செயல்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் இந்த மையம் உலகத்தரத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அகமதாபாத்தில் இந்த மையத்தின் 3 வளாகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஒன்றாக தில்லி புவி நிலையம் செயல்படுகிறது.
இந்த மையம் வேளாண்மை, வானிலை ஆய்வு, மீன் வளம், கடலியல், சுற்றுச்சூழல், வனம், ரயில்வே, ஊரக வளர்ச்சி போன்ற துறைகளுக்கான பயன்பாட்டு பணிகளை மேற்கொள்கிறது.
மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118301
***
TS/SMB/AG/DL
(Release ID: 2118413)
Visitor Counter : 16