சுற்றுலா அமைச்சகம்
நாட்டில் ஆரோக்கியச் சுற்றுலா
Posted On:
03 APR 2025 4:09PM by PIB Chennai
ஆரோக்கியச் சுற்றுலா உட்பட சுற்றுலா தலங்கள், சேவைகள், உள்ளிட்ட சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகள் அந்தந்த மாநில யூனியன் பிரதேச நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முயற்சிகள் மூலம் நாட்டின் பல்வேறு சுற்றுலா சேவைகளை ஊக்குவித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உதவுகிறது.
சுற்றுலா அமைச்சகம், 'ஸ்வதேஷ் தர்ஷன்', 'யாத்திரை புத்துணர்ச்சி, ஆன்மீக, பாரம்பரிய மேம்பாட்டு இயக்கமான பிரசாத், 'சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவி' ஆகிய மத்திய துறைத் திட்டங்களின் மூலம், நாட்டின் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இதனைத் தெரிவித்தார்.
----
(Release ID: 2118257)
TS/PLM/KPG/DL
(Release ID: 2118409)
Visitor Counter : 18