ஜல்சக்தி அமைச்சகம்
மகாராஷ்டிராவில் கிராமப்புறங்களில் ஜல் ஜீவன் இயக்கத்தின் குடிநீர் திட்டங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2025 3:04PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்குவதற்கு முன்பு, 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின்னர், இதுவரை, 24.03.2025 நிலவரப்படி, மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்டபடி, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் சுமார் 12.31 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, 24.03.2025 நிலவரப்படி, நாட்டில் உள்ள மொத்தம் 19.36 கோடி கிராமப்புற வீடுகளில், 15.54 கோடிக்கும் அதிகமான (80.26%) வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல், மகாராஷ்டிராவில் இந்தஇயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பு 48.44 லட்சம் (33%) கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின்னர், இதுவரை, 24.03.2025 நிலவரப்படி 82.37 லட்சம் கூடுதல் ஊரக வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 24.03.2025 நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 146.80 லட்சம் கிராமப்புற வீடுகளில், தோராயமாக 130.81 லட்சம் (89.11%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
**
(Release ID: 2115700)
TS/PLM/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2115812)
வருகையாளர் எண்ணிக்கை : 40