சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை விமான நிலைய விரிவாக்கம்

प्रविष्टि तिथि: 24 MAR 2025 6:42PM by PIB Chennai

2467 கோடி ரூபாய்  செலவில் சென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இரண்டு கட்டங்களாக மேற்கொண்டுள்ளது. முதல் கட்டத்தின் கீழ், ஒரு புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டம் கட்டப்பட்டுள்ளதுஇது விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகளிலிருந்து 30 மில்லியனாக உயர்த்தியுள்ளது. இந்த முனையம் 08.07.2023 முதல் செயல்பட்டு வந்துள்ளது.

இரண்டாம் கட்டம் 3வது முனையத்தின்  வளர்ச்சியை உள்ளடக்கியது, விமான நிலையத்தின் திறனை ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளாக மேலும் இது  மேம்படுத்துகிறது. இந்த கட்ட பணிகளை  மார்ச் 2026-ல் முடிக்க திட்டமிடப்படுள்ளது.
 

மாநிலங்களவையில்  கேள்வி ஒன்றுக்கு எழுத்து   மூலம் அளித்த  பதிலில்  சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணைமைச்சர் திரு முரளிதர் மொஹூல் இந்தத்  தகவலை தெரிவித்தார்.
 

***

TS/PLM/LDN/KR/DL


(रिलीज़ आईडी: 2114522) आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English