சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷகாவத் ஶ்ரீரங்கத்தில் கம்பராமாயண பாராயணத்தை தொடங்கிவைத்தார்

प्रविष्टि तिथि: 18 MAR 2025 9:28PM by PIB Chennai

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று (18/03/2025) திருச்சி ஶ்ரீரங்கத்தில் கம்ப ராமாயண பாராயணம் நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார்.

இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் தமிழ்நாட்டின் கம்பராமாயண பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் முன் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 12-13-ம் நூற்றாண்டுகளில் வால்மீகி இராமயணத்தை தழுவி இயற்றப்பட்ட கம்பராமயணம் சிறப்பான கலாச்சாரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கம்பர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் வட்டாரத்தில் உள்ள தேரெழுந்தூரில் உள்ள கம்பர் மேடு என்ற இடத்தில் பிறந்தார்.

உள்ளூர் கம்பராமாயண குழுக்களால் நடத்தப்பெற்றுவந்த தமிழ் கம்ப ராமாயண பாராயணம் காலவெள்ளத்தால் நடைமுறையில் குறையத் தொடங்கியது. தமிழ்நாட்டின் புதிய தலைமுறையினர் கம்பன் காவியத்தில் போதிய ஈடுபாடு காட்டாததால், தமிழ் கம்பராமாயணம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதைக் காண முடிகிறது. மீண்டும் இத்தகைய கம்ப இராமயணத்தின் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கும் வகையில் அதற்கான துவக்கவிழா இன்று மாலை 6.00 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு சிங்கர் கோயில் கலையரங்கில் (திருவரங்கம் கோவில் அருகில்), மாண்புமிகு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திரசிங் ஷெகாவாத் அவர்கள்  துவக்கி வைத்தார்.  இன்று கம்பராமயண பாராயணம் நிகழ்ச்சி பல்வேறு கம்பராமாயண கழகங்களைக் சேர்ந்தோரின் வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிள் சுமார் 50க்கும் மேற்பட்ட கம்பராமாயண கழகங்களைச் சேர்ந்தோரும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வசன கவியுடன் கூடிய சீதா கல்யாண நாட்டிய நாடகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 20 முதல் 29-ம் நாள் வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கம்பராமாயண பாராயாணம் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 30.3.2025 முதல் 6.4.2025 வரை கம்பர் பிறந்த கம்பர்மேட்டில் கம்பராமாயணம் தொடர்பாகன பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் மற்றும் தலைவர் தென்னகப் பண்பாட்டு மையம் அவர்களும், மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டு கம்பராமாயண நிகழ்ச்சியினை சிறப்பிக்க உள்ளார்கள்.

.***

AD/DL


(रिलीज़ आईडी: 2112576) आगंतुक पटल : 59
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English