பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா – பிரான்ஸ் கடற்படைகளின் இருதரப்பு கூட்டுப் பயிற்சிஃ-வருணா 2025
प्रविष्टि तिथि:
18 MAR 2025 6:36PM by PIB Chennai
இந்தியா - பிரான்ஸ் இடையேயான நீடித்த கடல்சார் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இரு நாட்டுக் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி மார்ச் 19 முதல் 22 வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டுப் பயிற்சி கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் பயிற்சியில் கடற்பகுதிகள், வான் பகுதிகள் ஆகியவற்றில் உத்திசார் பயிற்சிகளை மேற்கொள்கிறது. விமானம் தாங்கி போர்க் கப்பல்களான விக்ராந்த் மற்றும் சார்லஸ் டி கோல் ஆகிய இரு கப்பல்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன. போர் விமானங்கள், அணுஆயுதக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை இருநாட்டுப் கடற்படையின் வலிமையை பறைசாற்றுவதாக உள்ளது.
இந்தப் பயிற்சியில் பிரான்சின் நவீன ரக ரஃபேல்-எம் போர் விமானங்களும் இந்தியாவின் மிக்-29 கே போர் விமானங்களும் இடம் பெற்றுள்ளது.
***
TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2112511)
आगंतुक पटल : 72