உள்துறை அமைச்சகம்
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள்
Posted On:
12 MAR 2025 4:20PM by PIB Chennai
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன: -
இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க முகமைகள், இதர அமைப்புகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக 4 அடுக்கு போதைப் பொருள் ஒருங்கிணைப்பு மையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் சட்ட அமலாக்கம் தொடர்பான தகவல்களுக்காக என்.சி.ஏ.ஆர்.டி (NCORD)என்ற போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் கூடுதல் தலைமை இயக்குநர் / காவல்துறை தலைவர் அளவிலான காவல்துறை அதிகாரி தலைமையில் பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படை மாநிலம் / யூனியன் பிரதேசத்திற்கான என்சிஏஆர்டி செயலகமாகச் செயல்படவும், பல்வேறு நிலைகளில் என்சிஓஆர்டி கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை பின்பற்றுவதைக் கண்காணிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க வகையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பான புலனாய்வைக் கண்காணிக்க, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை இயக்குநரின் தலைமையின் கீழ் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் சஷஸ்திர சீமா பால் ஆகிய படைப்பிரிவுகளுக்கு போதை பொருள் கடத்தல் தடுப்பு சட்டம் 1985-ன் கீழ் சர்வதேச எல்லைப்பகுதிகளில் சட்டவிரோத போதை மருந்துகளை கடத்துவது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைகள், பறிமுதல் செய்தல், கைது நடவடிக்கைகள் போன்ற பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க என்.டி.பி.எஸ்(NDPS) சட்டத்தின் கீழ் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு (ஆர்.பி.எஃப்) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த கடற்படை, கடலோரக் காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான படைப்பிரிவு போன்ற பிற முகமைகளுடன் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
நாட்டின் போதைப்பொருள் சட்ட அமலாக்க முகமைகளின் திறனை வளர்ப்பதற்காக, போதைப்பொருள் தடுப்பு வாரியம் (NCB)மற்ற போதைப்பொருள் சட்ட அமலாக்க முகமைகளின் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது.
பல்நோக்கு முகமை மையம் அமைப்பின் கீழ் டார்க்நெட் மற்றும் கிரிப்டோ கரன்சிக்கான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு உதவும் அனைத்து தளங்களையும் கண்காணித்தல், போதைப்பொருள் கடத்தல் குறித்த உள்ளீடுகளை பல்வேறு முகமைகளில் உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளுதல், போதைப்பொருள் வலைப்பின்னல்களை இடைமறித்தல், வழக்கமான தரவுத்தள புதுப்பிப்புகளுடன் செயல்படும் முறைகள், தொடர்புடைய விதிகள் மற்றும் சட்டங்களை மறுஆய்வு செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
TS/SV/AG/DL
(Release ID: 2110991)
Visitor Counter : 15