சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) விஐடி சென்னையுடன் இணைந்து இன்று சென்னையில் பிஐஎஸ்-விஐடி விழாவை நடத்தியது
प्रविष्टि तिथि:
11 MAR 2025 7:30PM by PIB Chennai

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) விஐடி சென்னையுடன் இணைந்து இன்று (11.03.2025) சென்னையில் பிஐஎஸ்-விஐடி விழாவை நடத்தியது
நுகர்வோர் பாதுகாப்பில் பிஐஎஸ்-ன் பல்வேறு முயற்சிகள் குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை கண்காட்சியுடன் இந்த விழா தொடங்கியது. ஐஎஸ்ஐ-சான்றளிக்கப்பட்ட சாலை பாதுகாப்பு தயாரிப்புகளான ஹெல்மெட், ஆட்டோமொடிவ் கண்ணாடி மற்றும் டயர்களின் உயிர் காக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக இது அமைந்தது. இந்த சாலை கண்காட்சியை தாம்பரம் ஆணையரகத்தின் தலைமை போக்குவரத்து வார்டன் (பொறுப்பு) திரு எஸ். தாண்டவமூர்த்தி தொடங்கி வைத்தார். பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் தரமான ஹெல்மெட்களின் பயன்பாடு குறித்த நுகர்வோர் விழிப்புணர்வில் பிஐஎஸ் எடுத்த முயற்சிகளை அவர் பாராட்டினார். கண்காட்சியின் போது, ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக ஐஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டன. பிஐஎஸ் சென்னை கிளை மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி பவானி, பயணிகளுக்கு பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட பொருட்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

முன்னணி தொழில்துறை நிறுவனங்களுடன் கலந்துரையாடும் தொழில்துறை அரங்குகளை பிரமுகர்கள் திறந்து வைத்தனர். மாணவர்கள் பெருமளவில் இவற்றைப் பார்வையிட்டனர்.
தரம் மற்றும் இணக்கத்தின் முக்கியத்துவத்தை வலுப்படுத்த விஐடி சென்னை மாணவர்கள் கலந்து கொண்ட போட்டிகள் நடைபெற்றன
நிறைவு விழாவில் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். எஸ். பாலாஜி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். ஒரு பொருளின் மீது உள்ள ஐ.எஸ்.ஐ. முத்திரை உண்மையானதா என்பதை அடையாளம் காண ஒவ்வொரு நுகர்வோருக்கும் உரிமை உண்டு என்று அவர் பேசும் போது தெரிவித்தார். பி.ஐ.எஸ். தேசிய விநாடி வினாவில் பங்கேற்க மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் பிராந்திய ஆய்வக விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர் மீனாட்சி கணேசன் தனது உரையில், பல்வேறு நுகர்வோர் உரிமைகள் குறித்தும், இந்த ஆண்டு நுகர்வோர் உரிமைகள் தினக் கருப்பொருள் குறித்தும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
பிஐஎஸ் சென்னை கிளையின் விஞ்ஞானி, மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி பவானி நிகழ்ச்சியின் நோக்கங்களை விவரித்தார். தரநிலை கிளப்புகளை உருவாக்குதல், மற்றும் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு அவர் தெரிவித்தார்.

விழாவில் விஐடி சென்னை இணை துணைவேந்தர் டாக்டர் தியாகராஜன், விஐடி சென்னை கூடுதல் பதிவாளர் டாக்டர் பி.கே.மனோகரன், விஐடி-சென்னையைச் சேர்ந்த டீன் டாக்டர் ரவிசங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

***
AD/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2110465)
आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English