தேசிய மனித உரிமைகள் ஆணையம்
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது இரண்டு வார குறுகிய கால ஆன்லைன் உள்ளகப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
04 MAR 2025 5:34PM by PIB Chennai
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது இரண்டு வார ஆன்லைன் குறுகிய கால உள்ளகப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தில் பங்கேற்க நாட்டின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பல்வேறு கல்வித் துறைகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் 932 பேர் விண்ணப்பத்து இருந்தனர். இவர்களில் இருந்து 80 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வாரகால உள்ளகப் பயிற்சித் திட்டம் மனித உரிமைகள் விழிப்புணர்வு மற்றும் செயலூக்கமான ஈடுபாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அனைத்து குடிமக்களுக்கும் மிகவும் நியாயமான, சமத்துவமான மற்றும் மனிதாபிமான சமூகத்திற்காகப் பணியாற்ற தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையப் பொதுச் செயலாளர் திரு பாரத் லால் உரையாற்றிய போது, மாணவர்கள் இந்தக் காலகட்டத்தை வெறும் பாடத்திட்டத்தின் கூடுதலான ஒன்றாகக் கருதாமல், தங்களது தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தினார். மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் தகவல்களை உடனடியாக அணுகக்கூடிய காலகட்டத்தில், டிஜிட்டல் அணுகல் மற்றும் பயன்பாட்டைத் தொடர்ந்து உள்வாங்குதல் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதே உண்மையான சவாலாகும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108124
----
TS/IR/KPG/RR/DL
(रिलीज़ आईडी: 2108157)
आगंतुक पटल : 101