தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 2024 டிசம்பர் மாதத்தில் 16.05 லட்சம் நிகர உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
Posted On:
25 FEB 2025 4:58PM by PIB Chennai
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024 டிசம்பர் மாதத்திற்கான தற்காலிக ஊதியத் தரவை வெளியிட்டுள்ளது. இது 16.05 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த 2024 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் நிகர உறுப்பினர் சேர்க்கையில் 9.69% அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2023 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது நிகர உறுப்பினர் சேர்க்கையில் 2.74% வளர்ச்சியை காட்டுகிறது. இது அதிகரித்த வேலை வாய்ப்புகள் மற்றும் ஊழியர் நலன்கள் குறித்த மேலான விழிப்புணர்வைக் குறிக்கிறது. இது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் மக்கள் தொடர்பு முயற்சிகளால் வலுப்படுத்தப்படுகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 2024 டிசம்பர் மாதத்தில் சுமார் 8.47 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது 2023 டிசம்பர் மாதத்தை விட 0.73% அதிகமாகும்.
இதில் 18-25 வயதுக்குட்பட்டவர்களில் 4.85 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது 2024 டிசம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய சந்தாதாரர்களில் 57.29% ஆகும்.
மொத்த புதிய சந்தாதாரர்களில், சுமார் 2.22 லட்சம் பேர் புதிய பெண் சந்தாதாரர்கள் ஆவர். இந்த எண்ணிக்கை 2023 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 6.34% வளர்ச்சியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106143
***
TS/IR/AG/DL
(Release ID: 2106219)
Visitor Counter : 21