அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரதமரின் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான புதிய கட்டடத்தை சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 20 FEB 2025 6:02PM by PIB Chennai

நரம்பியல் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்கான மேம்படுத்தப்பட்ட பன்னோக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான புதிய கட்டடத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று திறந்து வைத்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில்  பிரதமரின் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவையைப் பெறும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்த முழுமையான மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவ சிகிச்சைக்கான நவீன முறைகள் உட்பட அனைத்தையும் உள்ளடக்கிய வகையில், இந்த சிகிச்சை மையம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த மையத்தில் குறைந்த செலவில் சுகாதார பராமரிப்பு சேவைகளுடன் புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிலும் இந்த மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மையம் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ்  செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105056 

------

TS/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2105114) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी