வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
“வடகிழக்கு பிராந்தியத்துக்கான சிறப்புத் திட்டங்கள்”
இடுகை இடப்பட்ட நாள்:
13 FEB 2025 2:02PM by PIB Chennai
மத்திய அரசு வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக அந்தந்த அமைச்சகங்கள்/துறைகள் மூலம் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2014-15-ம் நிதியாண்டிலிருந்து இந்த மத்திய அமைச்சகங்கள்/துறைகளால் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 10% என்ற அளவில் ரூ.5.74 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகமானது மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/முகமைகள் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் உட்பட ஐந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனுமதிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான காலக்கெடு, துறை, புவியியல் இருப்பிடம், செலவு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு திட்டத்திற்கேற்ப அதற்கான வளர்ச்சி நடவடிக்கைகளில் மாற்றம் செய்யப்படும்.
இந்தத் தகவலை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102675
*****
TS/SV/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2102760)
வருகையாளர் எண்ணிக்கை : 59