ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளி அமைச்சகத்திற்கு 5,272 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2025 8:11PM by PIB Chennai

2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஜவுளித் துறை அமைச்சகத்திற்கு 5,272 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் கூடுதலாகும்.  பருத்தி உற்பத்தியில் உள்ள தேக்க நிலைக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய பட்ஜெட்டில் 5 ஆண்டுக்கான  பருத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் கீழ் பருத்தி விவசாயிகளுக்கு அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த  உதவிகள் வழங்கப்படும்.  உள்நாட்டு பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவிடும்.

சர்வதேச அளவில் இந்திய ஜவுளித்துறை போட்டியிடும் அளவிற்கு முன்னேற்றம் அடையவும் இறக்குமதி சார்ந்த நிலையைக் குறைப்பதற்கும் இந்த பட்ஜெட்டில் வகை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் வேளாண்மை சார்ந்த ஜவுளிகள் மற்றும் அதன் உற்பத்திக்கான தொழில்நுட்ப வசதிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள வகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098773

----

SV/KPG/KR

 

***

 


(வெளியீட்டு அடையாள எண்: 2098789) வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati