சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மிக நுண்ணிய எரிபொருள் சாம்பல் குறித்த ஐஎஸ் விதிகள் பற்றி பிஐஎஸ் நடத்திய கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 29 JAN 2025 12:50PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மதுரை அலுவலகம் 2025, ஜனவரி 28 அன்று இந்திய தரநிலை ஐஎஸ் 19058:2024 -மிக நுண்ணிய எரிபொருள் சாம்பல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிமெண்ட் மற்றும் சிமெண்ட் தொடர்பான பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள், தயார் நிலை கலவை கான்கிரீட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட 42 பேர் கலந்து கொண்டனர். புதுதில்லியில் உள்ள இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர் செயலாளர் இந்த விவாதத்தில் பங்கேற்றார்.

மிக நுண்ணிய எரிபொருள் சாம்பல் என்பது மிக நுண்ணிய கண்ணாடி போன்ற துகள்களை கொண்ட மிகவும் நேர்த்தியான எரிபொருள் சாம்பலாகும். இந்தத் துகள்களின் சராசரி அளவு 3 மைக்ரான் முதல் 5 மைக்ரான் ஆகும். மிக நுண்ணிய எரிபொருள் சாம்பல் துகள்களின் நேர்த்தியான அளவு காரணமாக, இது அதிக வினைத்திறன் கொண்ட மேற்பரப்பு பகுதியைக் கொண்டுள்ளது. கசடு, மிக நுண்ணிய எரிபொருள் சாம்பல் ஆகிய இரண்டும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் சிலிக்கா ஃபியூம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மிக நுண்ணிய பொருட்களின் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் வரையிலான சிமெண்ட் கான்கிரீட் அல்லது சுண்ணாம்புக் கலவை ஆகியவற்றில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும் போது, கான்கிரீட் குணாம்சம், அதன் ஊடுருவும் தன்மை ஆகியவற்றை அதிகரிப்பதாகக் காணப்படுகிறது.

பிஐஎஸ் மதுரை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநரும் தலைவருமான திரு சு. . தயானந்த் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். டிசம்பர் 2024-ல் வெளியிடப்பட்ட இந்த முக்கியமான இந்திய தரநிலை குறித்து கருத்து தெரிவிக்க அவர் அழைப்பு விடுத்தார். ஐஎஸ் 19058:2024 -மிக நுண்ணிய எரிபொருள் சாம்பலின் சிறப்பு அம்சங்கள் குறித்து திரு கே ஜெயின் எடுத்துரைத்தார். ஐஎஸ் 19058:2024-ன் பொது அம்சங்கள் மற்றும் பிற மிக நுண்ணிய பொருட்களை விட மிக நுண்ணிய எரிபொருள் சாம்பலின் நன்மைகள் பற்றிய ஆழமான புரிதலை அவர் வழங்கினார்.

ஐஎஸ் 19058:2024 பற்றிய கருத்துகளை ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட், அரியலூர் பிரிவு பிரதிநிதிகள் எழுப்பினர். ஒரு விரிவான பொது கலந்துரையாடல் நடைபெற்றது, மேலும் இந்திய தரநிலை தொடர்பான கேள்விகளுக்கு திரு .கே ஜெயின் விளக்கமளித்தார். உதவி இயக்குநர் திரு ஜிதேந்திர குமார் சவுத்ரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பிஐஎஸ்கேர் செயலி மூலம் இந்திய தரங்கள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

***

 

 


(रिलीज़ आईडी: 2097251) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English