எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் நீல்கிரிக்கு தேவைப்பட்ட சிறப்பு எஃகு முழுவதையும் இந்திய எஃகு ஆணையம் வழங்கியுள்ளது

Posted On: 16 JAN 2025 6:05PM by PIB Chennai

'தற்சார்பு இந்தியா', ' இந்தியாவில் தயாரியுங்கள்' ஆகியவற்றின் உணர்வையும், பார்வையையும் வலுப்படுத்தும் தனது தீர்மானத்தைத் தொடர்ந்து, மகாரத்னாவும், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை எஃகு தயாரிப்பு நிறுவனமுமான இந்திய எஃகு ஆணையம்,  ஐஎன்எஸ் நீல்கிரிக்கு 4,000 டன் சிறப்பு எஃகினை வழங்கியுள்ளது. இந்த வலிமைமிக்க கப்பல் பிரதமர் திரு நரேந்திர மோடியால் நேற்று (ஜனவரி 15)  இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது.

 இந்திய எஃகு ஆணையத்தின் பொகாரோ  எஃகு ஆலை சுமார் 2,000 டன் தகடுகளை வழங்கியது. பிலாய் மற்றும் ரூர்கேலா எஃகு ஆலைகளால் முறையே 1,600 டன் மற்றும் 400 டன் தகடுகள் வழங்கப்பட்டன. ஐ.என்.எஸ் நீல்கிரி என்பது மசகான் கப்பல்கட்டும் தளத்தின் மூலம் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்ட போர்க்கப்பலாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2093501

***

TS/SMB/AG/DL


(Release ID: 2093533) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi