ஜல்சக்தி அமைச்சகம்
அடல் நிலத்தடி நீர் திட்டத்தின் 7-வது தேசிய அளவிலான வழிகாட்டும் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
16 JAN 2025 5:16PM by PIB Chennai
அடல் நிலத்தடி நீர் திட்டத்தை அமல்படுத்த தேசிய அளவிலான வழிகாட்டும் குழுவின் ஏழாவது கூட்டம் புதுதில்லியில் மத்திய அரசின் நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
ஐந்தாவது ஆண்டாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்தத் திட்டத்தின் நல்விளைவுகளை மற்ற பகுதிகளில் மேம்படுத்துவதற்கான நேரம் வந்துள்ளது என்றும் கூடுதல் செயலாளர் மற்றும் அடல் நிலத்தடி நீர் திட்டத்தின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் மாநிலங்களால் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மாநிலங்கள் இப்போது புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்து, திட்டத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தை மதிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடல் நிலத்தடி நீர் திட்டம் ஒரு தனித்துவமான, முன்னோடித் திட்டம் என்றும், சமூகங்களை வெற்றிகரமாக இணைத்து அவர்களின் விழிப்புணர்வுக்காக பணியாற்றியுள்ளது என்றும் மத்திய நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் எடுத்துரைத்தார். பங்கேற்கும் மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
அடல் நிலத்தடி நீர் ஊக்கத்தொகை ஒரு நிபந்தனையற்ற நிதி என்றும், இது தொடர்புடைய துறைகளின் வழக்கமான நடவடிக்கைகள் தவிர தொடர்புடைய வேறு பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும், வெற்றியின் அடிப்படையில் மேலும் முக்கிய நீரோட்டத்தில் சேர்க்கக்கூடிய புதுமையான தொழில்நுட்பங்கள் / செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை செயலாளர், மாநிலங்களின் மூத்த அதிகாரிகள், தேசிய அளவிலான வழிகாட்டும் குழுவின் உறுப்பினர்கள், பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், உலக வங்கி மற்றும் தேசிய திட்ட நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2093441
***
TS/SMB/AG/DL
(Release ID: 2093531)