புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவின் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு எண் நவம்பர் மாதத்தில் 5.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
Posted On:
10 JAN 2025 4:00PM by PIB Chennai
தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு எண் தொடர்பான மதிப்பீடுகள் மாதந்தோறும் 12-ஆம்தேதி (அல்லது 12 ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் முந்தைய வேலை நாள்) ஆறு வார கால தாமதத்துடன் வெளியிடப்படுகின்றன. மேலும் பல்வேறு முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் இந்த விவரங்கள் தொகுக்கப்படுகின்றன. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் / நிறுவனங்களிடமிருந்து தரவுகள் பெறப்படுகின்றன. தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.
2. சிறப்பம்சங்கள்:
2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணின் வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதமாகும். இது 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 3.5 சதவீதமாக (விரைவான மதிப்பீடு) இருந்தது.
2024 ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 1.9 சதவீதம், 5.8 சதவீதம் மற்றும் 4.4 சதவீதமாகும்.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணின் விரைவான மதிப்பீடுகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 141.1 -ஆக இருந்தது. இது 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 148.4 ஆக உள்ளது. 2024 ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீட்டு எண்கள் முறையே 133.8, 147.4 மற்றும் 184.1 ஆக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091785
***
TS/SV/AG/DL
(Release ID: 2091888)
Visitor Counter : 18