நிதி அமைச்சகம்
இந்திய வருவாய் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74-வது தொகுப்பின் நிறைவு அணிவகுப்பு: மத்திய நிதி இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி பார்வையிட்டார்
Posted On:
10 JAN 2025 5:22PM by PIB Chennai
பாலசமுத்திரத்தில் உள்ள தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப் பொருள் அகாடமியில் இன்று நடைபெற்ற இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரிகளின் 74-வது தொகுப்பு அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிறைவு நாள் நிகழ்ச்சியானது அதிகாரிகளின் கடுமையான பயிற்சியையும், நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் கர்மயோகியாக அவர்களின் பயணம் தொடங்குவதையும் எடுத்துக்காட்டுவதாக. அமைந்தது. இந்த குழுவில் 25 ஆண்கள் , 10 பெண்கள் என மொத்தம் 35 அதிகாரிகள் பயிற்சியை முடித்துள்ளனர்.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், மத்திய உள்கட்டமைப்புக் குழுவின் உறுப்பினர்களான திரு சஷாங்க் பிரியா திரு யோகேந்திர கார்க்: சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தேசிய பயிற்சி நிறுவனத்தின் முதன்மை தலைமை இயக்குநர் திரு கெய்கோண்டின் பன்மெய், மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பங்கஜ் சவுத்ரி, வர்த்தகம் புரிதலை எளிதாக்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதிலும், முக்கிய பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ள அதிகாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும் பொருளாதார, சமூக முன்னேற்றத்தை ஊக்குவிப்பதன் மூலமாக வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்து செல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091824
***
TS/SV/AG/DL
(Release ID: 2091874)
Visitor Counter : 27