அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஊடுகதிரில் உள்ள இரும்பு கோடுகள் இருமை கருந்துளை அமைப்பிலிருந்து கண்டறியப்படுகின்றன

प्रविष्टि तिथि: 10 JAN 2025 3:22PM by PIB Chennai

பூமியிலிருந்து 750 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள 4C+37.11 ரேடியோ பால்வெளியில் உள்ள இருமை கருந்துளை அமைப்பிலிருந்து ஊடுகதிரின் இரும்புக் கோடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது அமைப்பின் பண்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு வழிவகுக்கிறது. ஊடுகதிரின் பண்புகள் இருமை அமைப்பில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த கோடுகள் கருந்துளையின் பண்புகளை புரிந்து கொள்ள உதவும்.

அனைத்து பால்வெளிகளின் மையங்களும் சூப்பர்மாசிவ் கருந்துளைகளை  பேணுவதாக அறியப்படுகிறது. இந்த கருந்துளைகளைச் சுற்றியுள்ள வாயு அதன் ஈர்ப்புவிசையில் எவ்வாறு நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதாக உள்ளது.   பல்வேறு உமிழ்வு, உறிஞ்சுதல் போன்ற நிறமாலை கோடுகளுக்கு வழிவகுக்கிறது. வெப்பநிலை, அடர்த்தி மற்றும் அயனியாக்க நிலை போன்ற கருந்துளைகளைச் சுற்றியுள்ள வாயுவின் இயற்பியல் பண்புகளை ஆராய்வதற்கான முக்கிய கருவிகளாக இந்த கோடுகள் செயல்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091776

***

TS/SV/AG/RR/DL


(रिलीज़ आईडी: 2091869) आगंतुक पटल : 77
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी