புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் 3-வது காலாண்டு முடிவுகள்: 36% வருவாய் அதிகரிப்பு, வரிக்கு பிந்தைய லாபம் 27% உயர்வு
Posted On:
10 JAN 2025 9:57AM by PIB Chennai
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் 2024-25 -ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான நிதி சார்ந்த முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் காலாண்டு தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின் நிதிசார் முடிவுகளை 9 நாட்களுக்குள்ளேயே வெளியிட்டு சாதனை புரிந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், நிறுவனத்தின் செயல்திறன் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நடப்பு நிதியாண்டிற்கான 3-வது காலாண்டின் நிதிநிலை அறிக்கைக்கும், இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
நடப்பு நிதியாண்டின் 3-ம் காலாண்டின் சிறப்பம்சங்கள்:
வருவாய் அதிகரிப்பு: நடப்பு நிதியாண்டின் 3-ம் காலாண்டில் வருவாய் ரூ.1,698.99 கோடியை எட்டியுள்ளது. 2023-24-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், வருவாய் 35.57% அதிகரிப்பு
வரிக்கு முந்தைய லாபம் (PBT): இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.386.14 கோடியிலிருந்து 39.38% வளர்ச்சியை எட்டி ரூ.538.20 கோடியாக அதிகரித்து உள்ளது.
வரிக்குப் பிந்தைய லாபம் (PAT): ரூ.425.37 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தின் ரூ.335.54 கோடியோடு ஒப்பிட இது 26.77% உயர்வாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091670
***
TS/SV/AG/KR
(Release ID: 2091799)
Visitor Counter : 9