சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
2024-ம் ஆண்டில் மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு சில முக்கிய முன்முயற்சிகள், செயல்பாடுகள், சாதனைகள்
Posted On:
28 DEC 2024 4:22PM by PIB Chennai
2024-ம் ஆண்டில் மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகம் மேற்கொண்ட ஒரு சில முக்கிய முன்முயற்சிகள், செயல்பாடுகள், சாதனைகள் பின்வருமாறு
30.11.2024 நிலவரப்படி, 1,75,338 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
12 சேவைகளின் விரிவாக்கப்பட்ட தொகுப்புடன் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் செயல்படுகின்றன.
தற்போது, 12.37 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி தனிநபர்கள் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் உள்ளனர்.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தை அமல்படுத்தும் பல மாநிலங்கள்யூனியன் பிரதேசங்கள் பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்தியுள்ளன
தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) செயல்படுத்தும் தொற்று நோய்கள் தடுப்பை வலுப்படுத்தும் கண்காணிப்பு அமைப்பின் கீழ் 20 பெருநகர கண்காணிப்பு பிரிவுகள் பல்வேறு நிலைகளில் நிறுவப்பட்டுள்ளன
15 டிசம்பர் 2024 நிலவரப்படி, 7.90 கோடி பயனாளிகள் யு-வின் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 1.32 கோடி தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
காசநோய் (காசநோய்) ஒழிப்பை நோக்கிய இந்தியாவின் அர்ப்பணிப்பான பயணம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காசநோய் விகிதம், 2015-ம் ஆண்டில் 100,000 மக்கள் தொகைக்கு 237 ஆக இருந்தது. 2023 ஆம் ஆண்டில் 100,000 மக்கள் தொகைக்கு 195 ஆக 17.7% குறைந்துள்ளது.
காசநோயால் ஏற்படும் மரணங்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியாவின் உறுதிப்பாடு பாராட்டப்பட்டு, உலகளாவிய காசநோய் அறிக்கையில் பாராட்டப்பட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது
காசநோய் இறப்புகள் 2015-ல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 28 ஆக இருந்தது. 2023-ல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 22 ஆக 21.4% குறைந்துள்ளதாக 2024-ல் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் காசநோய் சிகிச்சை மூலம் பாதுகாப்பு பெறுவதற்கான அணுகல் 2015-ல் 53 சதவீதத்திலிருந்து 2023-ல் 85 சதவீதமாக கடந்த எட்டு ஆண்டுகளில் 32% அதிகரித்துள்ளது.
மத்திய அரசு தற்போது தேசிய எய்ட்ஸ் - பால்வினை நோய்க்கான தடுப்பு திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
எய்ட்ஸ் - பால்வினை நோய்க்கான தடுப்புத் திட்டம் (NACP) மத்திய அரசின் திட்டமாக 1 ஏப்ரல் 2021 முதல் 31 மார்ச் 2026 வரை ரூ.15,471.94 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
16.12.2024 நிலவரப்படி, 36 மாநிலங்கள்யூனியன் பிரதேசங்கள் டெலி-மானஸ் சேவைகளை தொடங்கியுள்ளன.
டெலி-மானஸ்-சில் 53 செயல்பாட்டுப் பிரிவுகள் உள்ளன. இதன் உதவி எண்ணில் 16,64,000 அழைப்புகள் கையாளப்பட்டுள்ளன.
அனைத்து ஆயுதப்படை வீரர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கு தொலைத் தொடர்பு சிகிச்சை உதவி - ஆதரவு வழங்குவதற்காக, புனேயில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பிரத்யேக டெலி-மானஸ் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
2013-14-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் 2024-25 ஆம் ஆண்டில் 780 ஆக 101.5% அதிகரித்துள்ளது. (அரசு கல்லூரிகள் 431, தனியார் கல்லூரிகள் 349).
2014-ம் ஆண்டுக்கு முன்பு 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை தற்போது 130 சதவீதம் அதிகரித்து 1,18,137 ஆக உயர்ந்துள்ளது.
2024-ம் ஆண்டில் மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், சாதனைகள், முன்முயற்சிகள் தொடர்பான விரிவான விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும் https pib.gov.inPressReleasePage.aspxPRID=2088577
httpsstatic.pib.gov.inWriteReadDataspecificdocsdocuments2024decdoc20241228477801.pdf
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088577
----
TS/PLM/KPG/DL
(Release ID: 2089643)
Visitor Counter : 71