சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது பதவிக்காலம்: பிரதமர் மோடியின் தலைமை மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளது
Posted On:
30 DEC 2024 8:03PM by PIB Chennai
2024 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது வெற்றி அவரது தனிப்பட்ட பாரம்பரியத்தை வலுப்படுத்துவது மட்டுமின்றி , இந்திய அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது. பிரதமர் மோடி இன்று இந்திய நிலைத்தன்மையின் அடையாளமாக மாறியுள்ளார் என்பதையும், பிஜேபி நல்லாட்சிக்கு உகந்த கட்சியாக உருவெடுத்துள்ளது என்பதையும் இது காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டில், உலக அளவில் ஆட்சிகளுக்கு எதிரான அலை முக்கிய ஜனநாயகங்களில் வீசியது, பதவியில் இருந்தவர்கள் குறிப்பிடத்தக்க தோல்விகளை எதிர்கொண்டனர். அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சியினர் அதிபர் பதவியையும் நாடாளுமன்ற இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் இழந்தனர். கன்சர்வேடிவ் கட்சி அதிகாரத்திலிருந்து உறுதியாக வெளியேற்றப்பட்டதை இங்கிலாந்து கண்டது. இதேபோல், ஃபிரான்ஸ், தென் கொரியா, போலந்து ஆகிய நாடுகளிலும் ஆளும் கட்சிகள் தோல்வியடைந்தன. உலகளாவிய இந்தப் போக்கிற்கு மாறாக, இந்தியாவில் நரேந்திர மோடி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது மட்டுமின்றி, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது பதவிக்காலத்தையும் உறுதி செய்தார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவரது தெளிவான வெற்றிகளைத் தொடர்ந்து, இந்திய வாக்காளர்கள் மீண்டும் மோடிக்கு ஒரு வலுவான தீர்ப்பை வழங்கினர், இது சர்வதேச அளவில் பல ஆட்சிகளுக்கு எதிரான அலைக்கு மாறாக ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கைக் காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பிஜேபியின் மிகப்பெரிய வெற்றிகளைக் இது குறித்தது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 1962 முதல் வேறு எந்த தலைவரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறவில்லை என்பதால், இந்த சாதனை இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.
நிலையற்ற உலகில் நிலையான தலைமை
2014 முதல், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா அரசியல் நிலைத்தன்மையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. இதே காலகட்டத்தில் மற்ற ஜனநாயக நாடுகள் அனுபவித்த அரசியல் கொந்தளிப்புடன் ஒப்பிடும்போது இந்த தொடர்ச்சி குறிப்பிடத்தக்கது.
மோடியின் பதவிக்காலம் ஒருங்கிணைந்த அரசாகக் குறிக்கப்படுகிறது. இது நீண்டகால பொருளாதார, சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. இது உலகளாவிய சக்தியாக இந்தியாவின் எழுச்சிக்கு பங்களித்துள்ளது.
இதற்கு மாறாக, அமெரிக்கா தொடர்ச்சியான வியத்தகு அரசியல் மாற்றங்களைக் கண்டுள்ளது. பராக் ஒபாமாவின் அதிபர் பதவியில் தொடங்கி 2017 வரை இருந்த ஆட்சி பின்னர் டொனால்ட் ட்ரம்பிடம் சென்றது. அவர் முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளையும் மிகவும் தனிமைப்படும் நிலைப்பாட்டையும் மேற்கொண்டார். 2021 ஆம் ஆண்டில், ஜோ பைடன் டிரம்பின் பல முக்கிய கொள்கைகளை மாற்றியமைத்து, பன்முகத்தன்மையையும் உள்நாட்டு முதலீட்டையும் வலியுறுத்தினார். டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பது, ஆழமான கட்சி பிளவுகள் மற்றும் ஆட்சியில் நிலையற்ற கொள்கை தன்மையை பிரதிபலிக்கும் மற்றொரு முன்னெடுப்பைக் கொண்டு வந்துள்ளது.
2014 முதல் குறிப்பிடத்தக்க அரசியல் நிச்சயமற்ற தன்மையை பிரிட்டன் சந்தித்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் கீழ், தலைமை அடிக்கடி மாறியது. டேவிட் கேமரூன் பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பின் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் போராடிய தெரசா மே ராஜினாமா செய்தார். பின்னர் போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். கொவிட் -19 தொற்றுநோய் காலத்தில் முன்னிலை வகித்தார். ஆனால் இறுதியில் ஊழல்களுக்கு மத்தியில் ராஜினாமா செய்தார். லிஸ் டிரஸின் குறுகிய மற்றும் கொந்தளிப்பான பதவிக்காலத்தைத் தொடர்ந்து ரிஷி சுனக், பொருளாதாரத்தையும் கட்சியையும் உறுதிப்படுத்த முயன்றார். உட்கட்சி கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் மோதல்களால் சோர்வடைந்த வாக்காளர்கள் உட்பட சவால்கள் இருப்பினும் அண்மையில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் பிரதமரானார்.இது நிர்வாகத்தில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.
ஆஸ்திரேலியாவும் அதன் வரலாற்று ரீதியான கொந்தளிப்பான அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தலைமைத்துவத்தில் விரைவான மாற்றத்தைக் கண்டுள்ளது. 2014-ல் டோனி அபோட் தொடங்கி, பிரதமர் பதவி மால்கம் டர்ன்புல், பின்னர் ஸ்காட் மோரிசன், இப்போது அந்தோனி அல்பனீஸ் ஆகியோருக்கு சென்றது. ஒவ்வொரு மாற்றமும் முன்னுரிமைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அல்பானீஸ் தனது முன்னோடிகளின் கீழ் மிகவும் பழமைவாத அணுகுமுறைக்குப் பிறகு பருவநிலை நடவடிக்கை மற்றும் சமூகக் கொள்கைகளில் கவனம் செலுத்துகிறார்.
இத்தாலியின் அரசியல் காட்சி சமமான ஆற்றல் கொண்டதாக உள்ளது. அடுத்தடுத்து வந்த அரசுகள் பெரும்பாலும் தங்கள் பதவிக்காலத்தை முடிக்கும் முன்பே சரிந்தன. மத்தேயோ ரென்சியின் சீர்திருத்த ஊக்குவிப்பு கொண்ட பதவிக்காலம் பாவ்லோ ஜென்ரிலோனிக்கு வழிவிட்டது. அதைத் தொடர்ந்து கியூசெப்பே கொன்டேயின் கூட்டணி அரசு , மரியோ டிராகியின் தொழில்நுட்பவாத தலைமை, இப்போது இத்தாலியின் முதல் பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் வந்தனர். மெலோனியின் வரலாற்று வெற்றி இருந்தபோதும், இத்தாலி அரசியல் பிளவுகள் மற்றும் பொருளாதார சவால்களுடன் தொடர்ந்து போராடி வருகிறது.
பாகிஸ்தான், குறிப்பாக, அரசியல் நிலையின்மைக்கு உதாரணமாக உள்ளது. அடிக்கடி தலைமை மாற்றங்கள் ஊழல் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படுகின்றன. 2014 முதல், நவாஸ் ஷெரீஃபிடமிருந்து ஷாஹித் ககான் அப்பாசி, அதைத் தொடர்ந்து இம்ரான் கான், இப்போது ஷெபாஸ் ஷெரீஃப் வரை நாடு மாற்றங்களைக் கண்டது. ஒவ்வொரு தலைவரின் பதவிக்காலமும் அவர்களின் முன்னோடிகளுடன் ஒரு சர்ச்சைக்குரிய உறவால் குறிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் சட்டப் போராட்டங்களிலும் சிறைவாசத்திலும் முடிவடைகிறது. இந்த கொந்தளிப்பான அரசியல் சூழல், நிலையான ஆட்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான பாகிஸ்தானின் திறனைத் தடுத்துள்ளது.
இஸ்ரேல் குறிப்பிடத்தக்க அரசியல் கொந்தளிப்பை அனுபவித்துள்ளது. குறிப்பாக அதன் முறிந்த கூட்டணி காரணமாக. 2014 முதல், பெஞ்சமின் நெதன்யாகு நஃப்டாலி பென்னட்டிடம் அதிகாரத்தை இழந்ததையும், அதைத் தொடர்ந்து யாயிர் லாபிட் குறுகிய பதவிக்காலத்தையும் நாடு கண்டது. நெதன்யாகு மீண்டும் பிரதமரானார்.
2014 முதல், இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டுக்கு ஆறு தேசிய தேர்தல்கள் நடந்துள்ளன. இந்த தேர்தல்கள் 2015, ஏப்ரல் 2019, செப்டம்பர் 2019, 2020, 2021 மற்றும் 2022-ல் நடந்தன.
ஜப்பான் ஒப்பீட்டளவில் அரசியல் நிலைத்தன்மைக்கு பெயர் பெற்றிருந்தாலும், அண்மை ஆண்டுகளில் அதன் தலைமை மாற்றங்கள் புருவங்களை உயர்த்தியுள்ளன. 2020 வரை பிரதமராக பணியாற்றிய ஷின்சோ அபே, உடல்நலக் குறைவு காரணங்களால் எதிர்பாராத விதமாக ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பதவியேற்று ஓராண்டுக்குப்பின் பதவி விலகிய யோஷிஹைட் சுகா மற்றும் பெரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் வெறும் 3 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஃபுமியோ கிஷிடா என மாறி இப்போது ஷிகெரு இஷிபா பதவிக்கு வந்துள்ளார்
2014 முதல், பொருளாதார நெருக்கடிகள், ஊழல் மோசடிகள் மற்றும் பிளவுபட்ட தேர்தல்களால் பிரேசில் அரசியல் எழுச்சியை எதிர்கொண்டது. தில்மா ரூசெபுக்கு எதிராக 2016-ம் ஆண்டு பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஜெய்ர் போல்சனாரோ அதிவலது ஜனரஞ்சக நிலைப்பாட்டை ஏற்று ஆட்சிக்கு வந்தார். அண்மையில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா பிளவுபட்ட தேர்தலுக்குப் பின் மீண்டும் பதவிக்கு வந்தார்.
தென் கொரியாவில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பார்க் கியூன்-ஹை 2017-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பின் வந்த மூன் ஜே-ன், பொருளாதார சவால்கள் மற்றும் இராஜதந்திர பதற்றங்களுடன் போராடினார். யூன் சுக்-யோல் தற்போது அதிபராக உள்ளார். அண்மையில் ராணுவச் சட்டம் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்க விசாரணைக்கு உட்படுத்தப்படும் நடைமுறையில் அவர் உள்ளார்.
2014 முதல் அர்ஜென்டினா குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது. கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னரிடமிருந்து மௌரிசியோ மேக்ரிக்கு தலைமை மாறியது, அதைத் தொடர்ந்து ஆல்பர்டோ பெர்னாண்டஸ் இருந்தார். இப்போது ஜேவியர் மைலி இருக்கிறார். ஒவ்வொரு தலைவரும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர், இது நிச்சயமற்ற, அடிக்கடி அரசியல் மறுசீரமைப்புகளுக்குப் பங்களிப்பு செய்துள்ளது.
இந்திய பொதுத் தேர்தல் 2024-ஐ வரலாற்று சிறப்புமிக்கதாக்கியது எது?
● 2024 தேர்தல் இந்தியாவை ஒரு நெகிழ்திறன் கொண்ட ஜனநாயகமாகக் காட்டியது, இது வலுவான வாக்காளர் ஈடுபாடு மற்றும் சிவில் நடத்தை ஆகியவற்றில் வெளிப்பட்டது.
● மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான உள்நோக்கம் கொண்ட தாக்குதல்கள் மற்றும் கடுமையான வெப்பம் இருந்தபோதும், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். ● முதல் முறை வாக்காளர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை, அனைத்து வயதினரும், அனைத்து தரப்பு மக்களும் ஜனநாயக நடைமுறையில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
● 1996 முதல் கடந்த 3 தசாப்தங்களில் முதல் முறையாக காஷ்மீரில் அதிகப்பட்ச வாக்குப்பதிவு 38% ஆக பதிவாகியுள்ளது.
● அதிகமான பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பாலின பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தியதால் இந்திய அரசியலில் அதிக உள்ளடக்கம் காணப்பட்டது. இளைஞர்களின் பங்களிப்பும் கணிசமாக அதிகரித்து, நாட்டின் அரசியல் தளத்தில் புதிய முன்னோக்குகளைக் கொண்டுவந்தது.
● 2024 தேர்தல்கள் இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சியை வெளிப்படுத்தின, குடிமக்கள் தங்கள் தலைவர்களிடமிருந்து தங்கள் முன்னுரிமைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை எவ்வாறு அதிகளவில் அறிந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது. 2047 வாக்கில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு பின்னால் மக்கள் உறுதியாக நின்றனர்.
● முதல்முறையாக மிகப்பெரிய சர்வதேச பிரதிநிதிகள் இந்த ஆண்டு இந்தியாவின் பொதுத் தேர்தலை நேரடியாக பார்வையிட்டனர். அவர்கள் கண்ட காட்சி அவர்களைக் கவர்ந்தது. சிலர் இந்த நடைமுறையின் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டினர். மற்றவர்கள் பசுமை வாக்குச் சாவடிகள் போன்ற தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் உண்மையிலேயே ஊக்கமளிப்பதைக் கண்டனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்-ஒப்புகைச் சீட்டுக் கருவிகளை தோராயமாக ஆய்வு செய்வது போன்ற தொழில்நுட்பத்தின் பயன்பாடும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
● இந்த தீர்ப்பு வளர்ச்சி, பன்முகத்தன்மை மற்றும் உறுதித் தன்மைக்கானது. ஏமாற்று, வஞ்சகம், பிரிவினைவாத அரசியலை மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.
● இந்தியா முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என்பதை நிரூபித்துள்ளது. தொடர்ந்து மூன்று முறை வெற்றிகரமாக பதவியைப் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உலகத் தலைவர்களின் குழுவில் பிரதமர் மோடியை வைத்துள்ளது.
இது தவிர, 2014-ல் தொடங்கிய இந்தியாவின் அரசியல் களத்தில் விரிவான மாற்றத்தின் ஒரு பகுதியாக அவை இருப்பதைக் காட்டும் மாநில அளவிலான வெற்றிகளையும் 2024 கண்டது. பிரதமர் மோடி தலைமையின் கீழ், பிஜேபி தனது செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது, ஒடிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளுக்கு ஒருங்கிணைந்த ஆட்சியைக் கொண்டு வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் பிஜேபி பெற்ற சில தீர்க்கமான வெற்றிகளையும் அவற்றை தனித்துவமாக்குவது எது என்பதையும் காண்போம் :
பகவான் ஜெகந்நாதரின் ஒடிசா காவி வழியில் செல்கிறது
பிரதமர் மோடி தலைமையின் கீழ், ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தை தோற்கடித்து பிஜேபி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. ஒடிசாவின் வரலாற்றில் முதல் முறையாக, மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தனது ஆதிக்கத்தை இழந்துள்ளது. பிஜேபி தனது இடங்களை வெறும் 1 லிருந்து 6 ஆக அதிகரித்துள்ளது. இது 2019-ல் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. அங்கு பிஜு ஜனதா தளம் 12 இடங்களையும், பிஜேபி 8 இடங்களையும் வென்றன. மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தவிர, ஒடிசா சட்டமன்றத் தேர்தலிலும் பிஜேபி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. 14 தொகுதிகளில் வெற்றி பெற்ற அக்கட்சி 66 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆந்திரா தீர்மானகரமாக தேர்வு செய்தது
2024 மக்களவைத் தேர்தலில், ஆந்திராவின் வலுவான பிராந்திய அரசியல் அடையாளம் இருந்தபோதும், தேசிய ஜனநாயக கூட்டணி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது, 25 நாடாளுமன்ற தொகுதிகளில் 20-ல் முன்னிலை வகித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதை குறிப்பிடத்தக்க இந்த சாதனை பிரதிபலிக்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார சீர்திருத்தங்கள், சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரதமர் மோடியின் தலைமை இந்த வெற்றியில் முக்கியமானது.
ஹரியானாவில் பிஜேபிக்கு ஆச்சரியம்
2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்துள்ளன. ஏனெனில் அது வரலாற்று ரீதியாக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஹரியானாவில் இந்த ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திய முதல் அரசியல் கட்சியாக பிஜேபி மாறியுள்ளது, இது மாநிலத்தில் வளர்ந்து வரும் அதன் செல்வாக்கு மற்றும் பலத்திற்கு ஒரு சான்றாகும்.
காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட போதும், பிஜேபி 48 இடங்களைப் பெற்று நேரடிப் போட்டிகளில் காங்கிரஸை தோற்கடிக்க முடிந்தது. எதிர்க்கட்சிகளின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதும், வாக்குகளை பிஜேபி மேசைக்கு கொண்டு வந்த அளவுக்கும் வேகத்திற்கும் அவற்றால் ஈடுகொடுக்க முடியவில்லை.
மகாராஷ்டிராவின் மகத்தான வெற்றி எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை மூடிவிட்டது
வரலாற்று வெற்றியில், பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிராவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது, ஒரு தலைவர் மாநிலத்தை அத்தகைய வெற்றிக்கு வழிநடத்தியது இதுவே முதல் முறையாகும். தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிஜேபி 131 இடங்களை வென்றது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாடி வெறும் 51 இடங்களையே வென்றது. ஆளும் கூட்டணி 230 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தது, இது பிரதமர் மோடி தலைமை மீது மக்கள் வைத்துள்ள வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 132 தொகுதிகளை கைப்பற்றிய பிஜேபி, 45 சதவீத தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றி மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் மிகப்பெரிய இடப் பகிர்வு இல்லை என்பதைக் காட்டுகிறது . இது பிஜேபியின் மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை திறம்பட மூடிவிட்டது.
***************
(Release ID: 2088971)
Visitor Counter : 49