பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப்படை கொடி நாள் சிஎஸ்ஆர் மாநாடு பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் புதுதில்லியில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 26 DEC 2024 4:03PM by PIB Chennai

ஆயுதப்படை கொடி நாள், பெருநிறுவன சமூக பொறுப்புடைமை மாநாட்டின் ஆறாவது பதிப்பு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி  புதுதில்லியில் நடைபெறுகிறது. முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் கேந்திரிய சைனிக் வாரியம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்கள், விதவைகள், அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்களின் மறுவாழ்வு, மறுகுடியமர்வு மற்றும் நலன்களுக்காக  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கவும், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடைமைகளளின்கீழ் உதவிக்கான ஆதரவு திரட்டுவதும் இதன் நோக்கமாகும்.

ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கிய  முக்கிய பெரு நிறுவனங்களின்  பிரதிநிதிகளும்  பாராட்டப்படவுள்ளனர். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், முன்னாள் படைவீரர்களுக்கான நலத்துறைச் செயலாளர் டாக்டர் நிட்டன் சந்திரா, பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமைகளுக்கான பிரதிநிதிகள் முன்னாள் வீரர்கள், பாதுகாப்புப் படை பணியாளர்கள், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

***

TS/SV/AG/DL


(रिलीज़ आईडी: 2088190) आगंतुक पटल : 65