சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தர நிர்ணய அமைவனம் - ஆயுர்வேதம், சித்தா, யுனானி (ASU) மருந்துத் தொழில் சங்கம், மருந்து உற்பத்தியாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம்
Posted On:
26 DEC 2024 3:53PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம், ஆய்வகச் சேவைகளின் நலன், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.


இந்திய தர நிர்ணய அமைவனம் - ஆயுர்வேதா, சித்தா,யுனானி (ASU) மருந்துத் தொழில் சங்கம், மருந்து உற்பத்தியாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டத்தை சென்னை பிஐஎஸ் தென் மண்டல அலுவலகத்தில் 26.12.24 அன்று நடத்தியது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருந்து உற்பத்தியாளர் சங்கம், இந்திய மருத்துவ பயிற்சியாளர் கூட்டுறவு மருந்தகங்கள் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருந்துத் துறையில் உள்ள பிற தரப்பினர், உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கீழ் ஆயுஷ் துறையில் தர நிர்ணய முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது
நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், நுகர்வோர் மத்தியில் தரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், சந்தையை விரிவுபடுத்தவும், போட்டித்தன்மையை ஏற்படுத்தவும். ஏற்றுமதியின் மூலம் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்தும், தொழில் துறை, உற்பத்தி நிறுவனங்களுடன் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கலந்துரையாடல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை தரப்பினரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள், உள்ளீடுகள் சேகரிக்கப்பட்டன.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை தலைமை இயக்குநர் (தென்மண்டலம்) டாக்டர் மீனாட்சி கணேசன், சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் திருமதி. ஜி. பவானி, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் ஆயுஷ் துறை புதுதில்லியில் இருந்து உறுப்பினர் செயலாளர் டாக்டர் ஜி கிருத்திகா ஆகியோர் உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் ஐஎஸ்ஐ சான்றிதழ் உட்பட, ஆயுஷ் துறையில் இந்திய தரநிலைகளை பின்பற்றவும், செயல்படுத்தவும் தொழில் சங்கங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
இந்திய தர நிர்ணய அமைவனம்-ஆயுஷ் அமைச்சகம் இடையே ஒரு குறிப்பிடத்தக்க கூட்டு முயற்சியை அண்மையில் ஏற்படுத்திய ஆயுஷ் துறையின் தரநிர்ணய செயல்பாடுகளை மையமாகக் கொண்ட ஒரு விளக்கக்காட்சியும், இக் கூட்டத்தில் விளக்கப்பட்டன அலுவலகப் பணியாளர்கள், உறுப்பினர்கள் தர மேம்பாடு குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
***
TS/SV/AG/RR
(Release ID: 2088124)
Visitor Counter : 69