சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஐஐடியின் ஆர்ஜிபி ஆய்வகம் ஒடிசா அரசுடன் இணைந்து சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த தரவுசார்ந்த அணுகுமுறைகளைப் பயன்படுத்த உள்ளது
Posted On:
26 DEC 2024 2:23PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி சென்னை), ஆர்ஜிபி ஆய்வகம் ஒடிசா மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக தரவுகளின் அடிப்படையில் அணுகுமுறையை மேற்கொள்ள கூட்டுச் சேர்ந்துள்ளது. உத்தி மற்றும் ஆதாரம் சார்ந்த அணுகுமுறைகள் மூலம் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கையில் இது ஒரு பகுதியாகும்.
இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி ஆர்பிஜி ஆய்வகமும், ஒடிசா மாநில வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறையும் கையெழுத்திட்டுள்ளன. ஆர்பிஜி ஆய்வகத்தின் ‘5இ மாதிரி- போக்குவரத்து பாதுகாப்புக் கட்டமைப்பின்’ அடிப்படையில் இந்த முன்முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பொறியியல், கல்வி, அமலாக்கம், அவசர சிகிச்சை ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கி இருப்பதுடன், மாநிலம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சாலைப் பாதுகாப்புக்கான மனிதக் காரணிகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை ஐஐடியின் முன்முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்த ஒடிசா மாநில எஃகு, சுரங்கம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. பிபூதி பூஷண் ஜேனா கூறுகையில், “ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்மை பயக்கும் பாதுகாப்பு, கண்டுபிடிப்புகளை வழங்கும் ‘வளர்ச்சியடைந்த ஒடிசா’ என்ற தங்களது இலக்கில் ஐஐடி சென்னை உடனான இந்த கூட்டாண்மை முக்கிய அம்சமாகும் என்று தெரிவித்தார். நிகழ்நேரத் தரவுகளையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சாலைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்குத் நீண்டகாலத் தீர்வுகளை திறம்பட உருவாக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கவனம் செலுத்தப்படும்” எனக் குறிப்பிட்டார்.
***
IR/RR
(Release ID: 2088081)
Visitor Counter : 24