மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் (ஜியோ-சயின்டிஸ்ட்) தேர்வின் இறுதி முடிவுகள்- 2024
Posted On:
23 DEC 2024 5:31PM by PIB Chennai
2024-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த புவி-அறிவியலாளர் பணிக்கான முதன்மை தேர்வு முடிவுகள் அடிப்படையிலும், 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வின்(நேர்முகத் தேர்வு)அடிப்படையிலும், இந்திய புவியியல் ஆய்வு மையம், மத்திய புவியியல் ஆய்வு மையத்தில் பல்வேறு பதவிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்கள், தகுதி வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 69 விண்ணப்பதாரர்கள் அந்தந்த பதவிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வளாகத்தில் உள்ள தேர்வு மையம் அருகே உள்ள பிரத்யேக கவுண்டரில் விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு அல்லது ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்களை வேலை நாளில் 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் தேர்வர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087334
***
TS/SV/AG/DL
(Release ID: 2087425)
Visitor Counter : 9